பக்கம்:சூரப்புலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மூன்றடிக்குமேல் இராது. இருந்தாலும் வேகம் அதிகம். நீரி: கிடக்கும் பெரிய பெரிய கூழாங்கற்களுக்கு மேலே நடக்கவேண்டும் கால் வழுக்கும். துறவி பகல் இரண்டு மணி வரையிலும் காத்திருந்தார். அந்த நேரத்தில்தான் வெப்பில் கொஞ்சம் அதிகம். பனியும் அதிகமா உருகும். ஆனல் திபெத்துப் பீடபூமியில் ஒடுகின்ற ஆறுகளில் அந்தச் சமயத்தில்தான் வெள்ளம் குறைவாக இருக்கும். தூரத் திலே இருக்கும்படியான உயர்ந்த சிகரங்களில் படலம் படலமாக படிந்து கிடக்கும் உறைபனி உருகி அங்கிருந்து வெள்ளம் வந்து சேருவதற்கு இன்னும் நேரமாகும். மாலே நேரமாக ஆக வெள்ளப் அதிகரித்துவிடும். பகல் இரண்டு மணி சுமாருக்கு வெள்ளம் கொஞ்சம் வடித் திருந்தது. துறவி சூரப்புலியைக் கூட்டிக்கொண்டு ஆற்றின் கரையோரமாகவே நடந்தார். எதிர்க்கரையை உற்றுக் கவனித்துக் கொண்டே நடந்தார். அங்கே ஓரிடத்தில் ஒரு சிறிய பாறை துணைப் போலப் பூமியிலிருந்து கிளம்பிச் செங்குத்தாக நின்றுகொன் டிருந்தது. அதைக் குறித்துக்கொண்டு ஆற்றின் ஓட்டத்திற்கு எதிர்ப்புறமாகத் துறவி கொஞ்ச தூரம் நடந்தார். பிறகு தமது மூட்டையை அவிழ்த்து அதற்குள்ளிருந்த நீண்ட கயிற்றை எடுத்தார். மலேப்புல்லால் திரித்த அந்தக் கயிறு கொஞ்சம் காய்ந்திருந்தது. அதைத் தண்ணீரில் கொஞ்ச நேரம் ஊற வைத்தார். அப்படி ஊறியதால் அது பதமடைந்து வலுவாயிற்று. அதன் ஒரு துனிய்ைச் சூரப்புலியின் கழுத்திலே கட்டிச் சூரப்புலியை ஆற்றை நீந்திக் கடக்குமாறு பணித்தார். இதுவரையிலும் துறவியின் செயல்களேச் சூரப்புலியால் புரிந்து கொள்ள முடியவில்லே. இப்பொழுது அது புரிந்துகொண்டது. சூரப் புலி ஆற்றில் பாய்ந்து நீந்தியது. வெள்ளம் வேகமாக அதை இழுத்துக்கொண்டு ஓடிய போதிலும் ஆற்றின் அகலம் குறைவாகை யால் சூரப்புலி விரைவில் அக்கரையை அடைந்தது, கயிற்றைத் தளர்த்திவிட்டுக்கொண்டேயிருந்த துறவி இக்கரையிலே சூரப் புலிக்கு எதிராகச் சென்று நின்ருர். பிறகு தூணைப்போல வளர்ந்து நின்ற பாறையருகிலே செல்லுமாறு சூரப்புலிக்கு சமிக்ஞை செய்தார். சூரப்புலியும் அவ்வாறே சென்று நின்றுகொண்டு அவரைக் கவனித்தது. துறவி கயிற்றைத் தளர்த்திவிட்டுக்கொண்டு சூரப் புலியை அந்தப் பாறைத்துாண இரண்டு மூன்று தடவை சுற்றி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/107&oldid=840551" இலிருந்து மீள்விக்கப்பட்டது