பக்கம்:சூரப்புலி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 மறுயோசனை ஒன்றும் செய்யாமல் அது முயலைப் பிடித்துவந்து விட்டது. அந்த இமலாயக்குழிமுயல் நடுங்கிக்கொண்டு துறவியின் முன்பு கிடந்தது. சூரப்புலியின் பிடியிலிருந்து விடுபட்டிருந்தாலும் அது எழுந்து தப்பி ஓடவில்லே. பயத்தால் அதற்கு ஒன்றும் செப்ப முடியவில்லை. அதன் கழுத்திலே சூரப்புலியின் கோரைப்பற்கள் பட்ட இடங்களிலே இரத்தம் வெளிப்பட்டு அதன் வெண்மையான உடம்பிலே சிவப்புக்கறை உண்டாக்கியிருந்தது. துறவி அதைப் பார்த்தார். அவர் கண்களிலே கண்ணிர். பிதுங்கிக் கன்னத்திலே வழியலாயிற்று. மெதுவாக அவர் அந்த முயல்க் கையில் எடுத்துத் தடவிக் கொடுத்தார். அப்பொழுதுதான் குரப்புலிக்குத் தான் செய்த தவறு தெளிவாகத் தெரிந்தது. கருணை பின் வடிவமாக இருக்கும் துறவி தம் உயிரைக் காப்பாற்றிக்கொள் வதற்காகவும் பிற உயிரைத் துன்புறுத்தமாட்டார் என்று முன்பே உணராமற்போனதற்காக அது வருத்தப்பட்டது. தன்னுடைய தவற்றிற்காகப் பிராயச்சித்தம் செய்வதுபோல அது ஊளையிட்டு அலறிற்று. பிறகு மெதுவாகக் குகையை விட்டு வெளியே சென்றது. சுமார் இரண்டு மணி நேரம் அது குகைக்கு வரவேயில்லே. பிறகு திடீரென்று அது மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடிவந்தது. அதன் வாயிலே துறவியின் கம்பளி மேலங்கியிருந்தது. “என்ன, அவர்களோடும் சண்டைக்கா போய்விட்டாய்?’ என்று துறவி கேட்டார். அவர் குரலிலே கோபமோ வெறுப்போ ஒன்றும் இருக்கவில்லை. திருடர்கள் சூரப்புலியால் தாக்கப்பட்டிருப்பார்களோ என்ற கவலை மட்டும் வெளிப்பட்டது. துறவிக்கு விருப்பமில்லாத காரியத்தை மீண்டும் செய்யவில்லே என்று கூறுவதுபோலச் சூரப்புலி அவரைப் பார்த்தது. வேண்டு மானுல் அ வ ேர நேரில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்பது போலவும் அது பலவகைகளில் தெரிவித்தது. வெளியே வருமாறும் துறவியை அழைத்தது. கம்பளி மேலங்கியைப் போட்டுக்கொண்டு துறவி வெளியே புறப்பட்டார். சூரப்புலி அவருக்கு முன்ல்ை வழி காட்டிக்கொண்டு ஒடிற்று. "அவர்களிடமிருந்து பிடுங்கி வந்திருந்தாயானல், இதை மீண்டும் அவர்களுக்கே கொடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/112&oldid=840558" இலிருந்து மீள்விக்கப்பட்டது