பக்கம்:சூரப்புலி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 குனர்ச்சியைச் சேர்ந்தவை. கீழ்த்தரமானவை என்று அதற்கு எப்படியோ தெரியத் தொடங்கியது. இந்த விலங்குணர்ச்சியானது விலங்குகளிடம் மட்டும் இருப்பதன்று. இது மனிதர்களிடத்திலும் இருக்கிறது என்பதைச் சூரப்புலி தன்னுடைய பழைய வாழ்க்கை பிலேயே கண்டிருக்கிறது. துறவி ஒரு தனிப்பிறவி. அவரிடத்திலே தாழ்ந்த உணர்ச்சி எதுவும் இல்லையென்பதையும் சூரப்புலி நன்கு உணர்ந்துகொண்டது. அவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் கிடைத்ததால்தான் தன்னுடைய வாழ்க்கையும் உயர்வடைந்தது என்று அது அறிந்தது. இந்த அறிவெல்லாம் அதற்கு எப்படி எப்படியோ மின்னல் வெளிச்சம்போல ஏற்பட்டது. விசுவலிங்கத்திற்கு எதிரிலே கழித்த எட்டு நாட்களிலே துறவி தமது தியான நிலயிலிருந்து விழிப்படையும்போது சூரபபுலியைத் தடவிக் கொடுக்கும்போதெல் லாம் புதிய ஒளி அதற்கு உண்டாயிற்று. இந்த நிக்ஸ்பிலே அதன் உள்ளத்திலே ஒரு கவலே பிறந்தது. துறவியார் இரண்டு மூன்று நாட்களாக உணவில்லாமலிருக்கிருர், பெளத்த மடத்திலிருந்து கொண்டுவந்த உணவெல்லாம் தீர்த்து விட்டது. தூக்குக்கூடை காலியாகக் கிடந்தது. அவர் முழுப் பட்டினியாக இருக்கிருரே என்று அது கவலையடைந்தது. எப்படி பாவது அவருக்கு உணவு கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று அது விரும்பிற்று. மானசரோவரத்தின் கரையிலுள்ள பெளத்த மடத்திற்குச் சென்ருல் உணவு பெறலாம் என்று அதற்குத் தோன்றிற்று. அதல்ை அன்றிரவே அது தூக்குக்கூடையை வாயில் கவ்விக்கொண்டு புறப்பட்டது. துறவி ஆழ்ந்த தியானத்தி லமர்ந்திருந்தார். குரப்புலி வேகமாக ஓடிற்று. விடிவதற்குள் மானசரோ வரத்தை அடைந்துவிட வேண்டுமென்று அதற்கு ஆசை. ஆல்ை இரண்டு மூன்று மைல்கள் சென்றதும் உறைபனி பெப்யத் தொடங்கிற்று. அதைப் பொருட்படுத்தாது சூரப்புலி ஒடிற்று. தன் உடம்பின்மேல் விழுகின்ற உறைபனியை அடிக்கடி உடம்பைக் குலுக்கி உதறிக்கொண்டே சென்றது. எங்கும் ஒரே வெண்மையாக மாறத் தொடங்கிற்று, சில இடங்களிலே உறைபனி பெருங்குவியலாகக் கிடந்தது. அதன் மேல் செல்லுவது சிரமமாக இருந்தாலும் சூரப்புலி விடாமுயற்சியோடு அடியெடுத்து வைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/120&oldid=840567" இலிருந்து மீள்விக்கப்பட்டது