பக்கம்:சூரப்புலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அவனேக் கண்டதும் குரப்புலி உர் என்று உறுமிற்று. அவன் அதைப் பொருட்படுத்தாமல் அருகிலே வந்தான். இப்பொழுது சூரப்புவி அவனக் கண்டு பயப்படவில்லே. அதன் தோற்றத்திலே ஒரு புதிய மாறுதல் இருந்தது. தாடிக்காரன் வழக்கம்போலக் ைக ைய ஓங்கின்ை. ஓங்கிய கையைத் தாவிப் பிடித்து சூரப்புலி கடித்துவிட்டது. கடிக்கவா பார்க்கிருப் ? குடிகார நாயே என்று கூவிக்கொண்டு தாடிக்காரன் ஒரு கல்லே எடுக்கப்போனன். ஆல்ை, அவனுக்கு குடி வெறி உச்ச நிலக்குப் போய்விட்டது. அப்படியே விழுந்து, தின்றதையொல்லாம் கக்கிக்கொண்டு கிடந்தான். சூரப்புலியும் தனக்கு வழக்கமான இடத்தில் படுத்தது. ஆளுல், அது அன்று காவல் காக்கவில்லை. வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டு கிடந்தது. பல நாட்களாக அந்தப் பக்கத்தில் வந்து தேடிக்கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்கு அன்று வெற்றி கிடைத்துவிட்டது. அந்தப் பகுதியிலேதான் திருட்டுச் சாராயம் காப்ச்சுகிருர்களென்று அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதல்ை, சாதாரண உடையிலே வந்து அந்தப் பகுதியில் புகுந்து பல தடவை தேடிப் பார்த்தார்கள். சூரப்புலியின் எச்சரிக்கையால் அவர்கள் முயற்சி இதுவரையிலும் பலிக்கவில்.ே அன்று சூரப்புலி சாராய மயக்கத்தால் பேசாமல்படுத்திருந்தது. குகைக்குள்ளே ஆரவாரம் ஒயவே -இல்லே. அந்த ஆரவாரத்தைக் கேட்டுப் போலீஸ்காரர்கள் குகைக்குள் வந்து சுலபமாக முதலா ளியையும் அவனுடனிருந்தவர்களேயும் பிடித்துக் கைது செய்துவிட் டார்கள். குகைக்குள்ளிருந்த பொருள்களையும் கைப்பற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மறுநாள் காலேயில்தான் தாடிக்காரன் மயக்கம் தெளிந்து எழுத் தான். கையிலே சூரப்புலி கடித்திருப்பதும் நன்ருகத் தெரிந்தது. அவன் கோபத்தோடு சூரப்புலியை அடிக்க ஓடின்ை. சூரப்புலி குகையை நோக்கிக் கத்திக்கொண்டு ஓடிற்று. தாடிக்காரன் அதைப் பின் தொடர்ந்து போனன். அங்கே போனதும் அவனுக்கு விஷயமெல்லாம் விளங்கிவிட்டது. குகையில் ஒரு பொருளும் இருக்கவில்லே. போலீசார்தான் அவற்றைக் கைப்பற்றியிருக்க வேண்டும் என்று அவன் யூகித்து அறிந்துகொன் டான். வேறு யாரும் இப்படித் தாழிகளையும் மிடாக்களையும் பானகன் பும் மற்ற பொருள்களோடு சேர்த்து எடுத்துச் செல்ல மாட்டார்கள்.இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/31&oldid=840592" இலிருந்து மீள்விக்கப்பட்டது