பக்கம்:சூரப்புலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 நோயா ? எங்கே?' என்று கேட்டுக்கொண்டே குருடன் கீழே குனிந்து குசப்புலியைத் தன் கைகளால் தடவிப் பார்த்தான். "நல்ல நாப். இதற்குக் கொஞ்சம் சோறு போடு' என்ருன் குருடன். "உனக்குச் சோறு கிடைத்தால் பத்தாதா ? அதற்கு வேறு சோரு ?” என்று சீறின்ை பையன். "அப்பா, அப்படிச் சொல்லாதே. பெருமாள் புண்ணியத்திலே இந்தத் திருவிழாவிலே சோற்றுக்குக் குறைவில்லே. அதற்கும் போடு, பாவம், வாயில்லாத சீவன்' என்ருன் குருடன். "உனக்கு வேலையில்லை. நான் மாட்டேன் போ' என்று சொல்லிவிட்டுப் பையன் அந்த இடத்தைவிட்டுக் கொஞ்சம் விலகிப் போய்விட்டான். குருடன் கீழே அமர்ந்து சூரப்புலியை மீண்டும் தடவிக்கொடுக் தான். பிறகு மெதுவாகச் சுற்றிலும் கையால் தொட்டுப்பார்த்துச் சோற்றுத் தகர டப்பாவை எடுத்தான். அதிலிருந்த சாதத்தை அன்போடு சூரப்புலிக்கு வைத்தான். இந்தா, சாப்பிடு” என்று பரிவோடு சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/50&oldid=1276980" இலிருந்து மீள்விக்கப்பட்டது