பக்கம்:சூரப்புலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முகத்தோடு துறவி இனம் கொடுப்பதைப் பார்த்து அது சும்மா இருந்துவிடும். இப்பொழுது அது சும்மா இருக்க விரும்பவில்லை. தாலே விட்டுக் கொஞ்ச தூரம் குதிரைக்காரன் சென்றதும் சூரப்புலி அவனுக்கு முன்னல் பாய்ந்து ஓடி வழி மறித்துக்கொண்டது. குதிரையையும் குதிரைக்காரனேயும் மேலே செல்லவிடாமல் தடுத்தது. அவன் போக முயன்ருல் கடிக்கப் போவதுபோல நடித்தது. குதிரை பையும் கடிக்கப் போவதுபோல நடித்து அதை மிரட்டித் தால் நோக்கி ஓடும்படி செய்தது. அதனல் குதிரைக்காரன் அசந்துபோனன். மேலும் அவனுக்குத் திரும்பிப் போகவும் விருப்பம் கிடையாது. சூரப்புலி யின்மேல் குற்றம் சொல்லிக்கொண்டு துறவி இருந்த இடத்திற்குத் திரும்பி வந்தான். சுவாமி, இது பொல்லாத நாய். என்ன அல்மோரா போக விடவே யில்லே’ என்று சொல்லிக்கொண்டே அவன் சிரித்தான். துறவியும் சிரித்தார். மேலும் ஓர் ஐந்து ரூபாய் இனம் கொடுத்தார். குதிரைக்காரன் அதை வரங்கிக்கொண்டு ஊருக் குள்ளிருக்கும் பலகாரக்கடையை நோக்கிச் சென்ருன். ஆனல் அவனுடைய தொந்தரவு அத்துடன் முடியவில்லே. தாக்லிவிட்டு டிட்டிஹட்டை நோக்கிச் செல்லும் வழியிலேயே அவன் மீண்டும் பிணங்கத் தொடங்கின்ை. ஐந்து மைல் தூரத்திற்கு ஒரே செங்குத்தான மலேயின்மீது ஏற வேண்டும். அதிலே கொஞ்ச தூரம் சென்றவுடனே நந்தா தேவி, பஞ்சசூலி, பிண்டரி என்ற சிகரங்களின் காட்சிகள் தென்பட்டன. அவைகள், இமயத்திலே இருக்கும்படியாள உயர்ந்த சிகரங்கள். நந்தாதேவியின் உயரம் 25,000 அடி. இதைப் போலவே மற்ற சிகரங்களும் மிக உயர மானவை. அவைகள் எப்பொழுதும் உறைபனி மூடிக்கிடக்கும். பார்ப்பதற்கு அழகான தெய்விகக் காட்சியாக இருக்கும். அவற்றைக் கண்டதும் துறவி தம்மை மறந்து தியானத்தில் அமர்ந்துவிட்டார். உலக நினைவே அவருக்கு அற்றுப்போப்விட்டது. அவருடைய நிலேமையைக் கண்டு சூரப்புலி ஆச்சரியத்தோடு படுத்திருந்தது. பிறகு மெதுவாக எழுந்து சுற்றிலும் உள்ள அடர்ந்த மரங்களுக்கிடையே உலாவிற்று. மிக உயர்ந்த மரங்கள் வானத்தை முட்டுவதைப்போல அடர்ந்து இருந்தன. மரக்கூட்டங் களுக்கிடையே வழியே இருக்கவில்லே. செடிகளும் புதர்களும் நெருக்கமாக இருந்தன. காட்டிற்குள்ளிருந்து பலவகையான கொடிய விலங்குகளின் ஒலி முழக்கம் சூரப்புலியின் காதுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/87&oldid=840654" இலிருந்து மீள்விக்கப்பட்டது