பக்கம்:சூரப்புலி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 என்ற ஊர் வரையில் தானே கூட வருவதாக அவன் துறவியிட தெரிவித்தான். கர்ப்பியாங் அல்மோராவிலிருந்து 150 யை தூரத்திலுள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் 10,500 அடி உயரத்தி இருக்கிறது. அதற்கு மேலும் 150 மைல் பனிப்பிரதேசத்தி சென்ருல்தான் கயிலாய கிரியைத் தரிசிக்க முடியும். குதிரைக்காரன் கர்ப்பியாங் வரையிலும் வரத் தயாரா இருந்தாலும் துறவி அவனே அழைத்துச் செல்ல விரும்பவில்: அவனுக்கு உண்டான கூலியெல்லாம் கொடுத்துவிட்டுத் தனியாக சூரப்புலியோடு யாத்திரையை மேற்கொள்ளத் தீர்மானித்தார். தம்மால் சுமக்கும் அளவிற்குக் கம்பளித் துணிகளேயும் உணவு பொருள்களேயும் அவர் வைத்துக்கொண்டு மீதியை அந்த ஊரிலேயே எதிர்ப்பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டார். ைக யி !ே நீளமான ஊன்றுகோல். பக்கத்திலே சூரப்புலி. இவ்வாறு துத புறப்பட்டார். இப்படித் தனியாகச் செல்லுவதுதான் அவருக்! மிகவும் பிடித்தமாக இருந்தது போல் தோன்றிற்று. சூாப்புலிக்கு இதுவே பிடித்திருந்தது. ஆஸ்கோட்டையை விட்டதும் 3000 அடிக்கும் அதிகமான ஒ! பெரிய இறக்கம் வருகிறது. அடிமேல் அடி வைத்து அதி!ே மூன்றுமைல் இறங்கினல் கெளரிகங்கை ஒடுமிடத்திற்கு வத்! சேரலாம். நதியோரமாகவே சென்ருல் அந்த நதி காளி ಧಿ யோடு கூடுமிடத்தை அடையலாம். அந்த இடத்தில் ஜலஜி என்ற ஓர் அழகிய சிறு கிராமம் உண்டு. அங்கே ஒ: பெரியாருடைய சமாதியுள்ளது. அத்துடன் சேர்ந்து ஓர் ஆசிரம இருக்கிறது. அந்த ஆசிரமவாசிகள் துறவியை அன்யோடு ' வேற்று உபசரித்தார்கள். கூடுதுறைக்குப் பக்கத்திலே கெளரிகங்கையின் நடுவிலே சி உயரமான பாறை இருந்தது. மால் நேரத்தில் அந்த இடம் . அழகாக இருந்ததைக் கண்டு துறவி அந்தப் பாறைக்குச் சென்! தனியாக இருந்து தியானம் செய்ய விரும்பினர். வழக்கம்பே சூரப்புலி அவர் பக்கத்திலேயே சென்றது. ஆற்றின் நடுவேயிருந்த பாறையை அடைவது சிரமம்" இருக்கவில்லை. ஏனென்ருல் அப்பொழுது ஆற்றில் முழங்கள் அளவுக்குமேல் தண்ணீர் இல்லை. தண்ணீரின் வேகம் சர்! அதிகமாக இருந்தபோதிலும் நடந்து செல்ல முடித்தது. து குரப்புலியை அழைத்துக்கொண்டு பா ைற ைப அடை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/91&oldid=840659" இலிருந்து மீள்விக்கப்பட்டது