பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ரத்தின் மேல் நிற்கவேண்டியிருப்பதனால் இவைகள் மிகவும் பலமாயிருக்கின்றன. இச்சமபத்தில் சுவாஸம் முழுவதையும் வெளியில் விட்டு வயிற்றை நன்றாக உள்ளுக்கிழுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் தான் சரீரத்தின் எல்லா அவயவங்களாகிய கால்விரல்கள் முழங்கால்கள், கைகள், தலை, இவை நிலத்தின் மேல் படும். ஆனால் வயிறானது நிலத்தின் மேல் படக்கூடாது. அதைப் பூர்த்தியாக மேலே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அதன் தசை நார்களெல்லாம் நன்றாகப் பலப்படும். (நான்காவது படத்தைப் பார்க்க.) ஐந்தாவது நிலை:- திரும்பவும், எழுந்து நிற்பதற்கு முன் நிதானமாக சுவாஸத்தை முழுவதும் உள்ளுக்கிழுத்துக் கொண்டு மாளி கையைப் பார்த்துக்கொண்டே தலையை எடுத்துக்கொண்டு கூடிய வரையில் முதுகை வளைக்க வேண்டும். இந்நிலையில் சரீரத்தின் பாரமெல்லாம் கைகளின் மேல் விழும். இதனால் கைகளின் எல்லா பாகங்களும் நன்றாகப் பருத்துப் பலத்தையும், அழகையும் அடையும். மார்பும் அகர்ந்து நிற்கும். அழுத்தமாகச் சுவாஸத்தை எடுத்துக் கொள்ளுவதனால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும்படியான கொழுப்பு குறைந்து போகும். சரியான ஆரோக்கிய ஸ்திதியில் இருப்பதற்கு அடையாளங்கள் என்னவென்றால் மார்பின் அளவு அதிகப்பட்டும் அடிவயிறு குறைந்தும் இருப்பனவே. முடிவாக, சரீரத்தின் உள் அவயங்களாகிய கல்லீயல், மண்ணீரல், குடல்கள் இவற்றால் நேரிடும் துன்பங்களும் அழிந்து போம். இந்நிலையினால் தொடைகள், முதுகு, கழுத்து, தொண்டை முதலிய எல்லா அவ யங்களும் பலத்தை அடையும். தவிரவும் தப்பான ஆகாரத்தால் ஏற்படும் வியாதிகளும், கண்டமாலை முதலிய நோய்களும் இதனால் நீங்கும் என்பதை நம்பலாம். (5-வது படத்தைப் பார்க்க.) ஆறாவது நிலை;- கால்களை முன்னுக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது வயிறும், விலாக்களும் எப்படிப் பாரத்தை ஏற்றுக்கொள்ளுகின்றன என்பதை மூன்றாவது நிலையில் விவரித்திருக்கிறோம். ஆனால் இரண்டு பாதங்களையும் சரியாக முன்போல் வைத்துக் கொண்ட பிறகு, கைகளைத் துணியிலிருந்து எடுத்துக் கொள்ளுவதற்கு முன் சுவாஸத்தை இழுத்துக்கொண்டு முழங்கால்களைச் சிறிதும் வளைக்காமல் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதைச் சற்றும் மறக்கக் கூடாது. ஆரம்பத்தில் ஒரு சுற்று (25 நமஸ்காரங்களை) மாத்திரம் செய்வதற்கு உங்களுக்குச்சக்தி இருக்கும் பொழுது முதல்நமஸ்காரத்தில்