பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வலக்காலை முன் கொண்டு வந்தால் இரண்டாவது நமஸ்காரத்தில் இடது பாதத்தை முன் கொண்டு வந்தும் இம்மாதிரியே மாற்றி மாற்றிச் செய்யவேண்டும். இம்மாதிரிச் செய்வதால் வயிற்றின் இரண்டு பக்கங்களுக்கும், தோள்களுக்கும் சமமாகப் பயிற்சி ஏற்படும். இம்மாதிரியே இன்னும் அதிகமாக நமஸ்காரங்களைச் செய்யும்பொழுதும் பாதங்களை மாற்றி மாற்றி வைத்தல் வேண்டும். ஈரலானது சரியானபடி இல்லாவிட்டால் அது சரியாக வரும் வரையில் ஒவ்வொருதரமும் வலது காலையே முன்னுக்கு எடுத்து வைக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அதாவது நெடுநாளாக ஈரல் நோயினால் வருந்துபவர்கள் எப்பொழுதும் வலது காலையே முன்னுக்குவைத்துக்கொண்டிருக்கவேண்டும். இம்மாதிரியே மண்ணீரல் (Spleen) நோயால் வருந்துபவர்கள் இடது காலையே முன்னுக்கு வைத்துக்கொண்டிருக்கவேண்டும். இவ்விஷயத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களுடைய புத்தியை உபயோகித்துச்செய்ய வேண்டும். நாம் இதுவரைக்கும் சூரிய நமஸ்காரங்களினால் சரீரத்தின் எல்லா அவயவங்களும் எப்படி பலப்படுகின்றன என்பதைக் கூறி வந்தோம். இனிமேல் இவை மனதிற்கு எத்தகைய நன்மையைத் தருகின்றன என்பதைச்சற்று ஆரோய்வோம். மனிதனானவன் எக்காரியத்தைச் செய்தபோதிலும் அதில் தன்னுடைய மனதைச்சரி யாக வைத்தாலொழிய அது திருப்திகரமாய் நிறைவேறுவதில்லை. ஆகையால் இப்பரிசுத்தமான தேகப்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் நமஸ்காரங்களைச் செய்யும் பொழுதும், செய்தபிறகும் தன்னுடைய காயசக்தியையும், மனோசக்தியையும் அதிகப்படுத்த வேண்டுமென்றும், பிறகு அவைகளைச் சரியான வழியில் உபயோகிக்க வேண்டுமென்றும் தன்னுள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். எவ்விதமான தேகப்பயிற்சியைச் செய்தபோதிலும் அதனால் பிரதியொரு செய்கை அல்லது இயக்கமானது சரீரத்தின் எல்லாத் தசை நார்களையும் பலப்படுத்துகின்றது என்பதை அறிந்து கொண்டு காய சக்தியையும் மனோ சக்தியையும் ஒருவழிப் படும்படிச் செய்தல் வேண்டும். மனதைச் சஞ்சலப்படும்படி விட்டு ஒரு மனதுடன் இல்லாமல் எந்திரம் போலக் காரியங்களைச் செய்தால் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. அசட்டையாக நெடுநாள் வரையில் சூரிய நமஸ்காரங்களைச் செய்தால் சரீரமானது சிறிது பலனை அடையுமே யொழிய முழுப்பலனை யடையாது. ஆனால் சரியாக பக்திச்சிரத்தையுடனும் ஏகாக்ரசித் தத்துடனும் செய்துவந்தால் சரீரத்தின்கண் உள்ள எல்லாவிதமான