பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வியாதிகளும், பாதைகளும் நீங்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. கருமான், தச்சன் முதலியவர்களுடைய தசைநார்கள் பார்ப்பதற்குப் புஷ்டியுள்ளவைகளாகக் காணப்படினும் உண்மையில் அவைகளுக்கு அவ்வளவு சக்தியிருக்காது. இந்த அதிருப்திகரமான பிரயோசனத்தைத் தப்புவிக்க வேண்டுமானால் நமஸ்காரங்களைச் செய்யுங்கால் நிமிஷந்தோறும் ஒவ்வொரு அவயவத்தின் மேலும் மனதை (கவனத்தைச்) செலுத்தவேண்டும். பிரதியொரு அவயவமும் அதிகபுஷ்டியையும், பலத்தையும் அழகையும் அடைந்து கொண்டே வருகின்றது என்று நாம் நினைத்துகொண்டே இருந்தால் அது அப்படியே ஆகும். சிரேஷ்டமான இக்காரியத்தைச் செய்யுங்கால் நாம் நம்முடைய மனதை அடக்காமல் வேறு விஷயங்களில் புகும்படிச் செய்தால் நமக்கு சிரமம் ஏற்படுமே யொழிய யாதொரு பிரயோஜனமாவது பலனாவது சிறிதும் உண்டாகாது. அத்தியாயம் 6. நமஸ்காரங்களைச் செய்யுங்கால் பார்வையையும் வாக்கையும் எப்படிப் பிரயோகஞ் செய்தல் வேண்டுமென்பது. மனம் சஞ்சலப்படாமல் ஒரேவழியில் நிற்பதற்குப் பார்வை (திருஷ்டி) மிகவும் உதவிபுரிகின்றது. மனதை ஒரேவழியில் நிறுத்து வதற்காக ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் பின் வறுமாறு கூறியிருக்கிறார். "கண்களை இப்புறம் அப்புறம் சுழலவிடாமல் உங்களுடைய மூக்கின் நுனியைப்பார்த்துக் கொண்டிருங்கள் இக்காரணத்தினால் தான் நாங்கள் பின்னே நமஸ்காரங்களைச் செய்யுங்கால் கண்ணெதிரில் சூரிய பகவான் அல்லது உங்களுடைய இஷ்டதேவதையின் படத்தைவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளோம். தலையைக் கீழே தொங்கவிடுங்கால் பார்வையானது நிலத்தின் பேரிலும், மேலுக்கு எடுக்குங்கால் மாளிகை அல்லது கூரையின் பேரிலும் செல்லும். ஆனால் எழுந்து நின்று பிரார்த்தனைக்காகக் கைகளைச் சேர்த்துக்கொண்டிருக்கும் பொழுது மனமானது ஒரு வழிப்படுதற்காக எதிரில் ஒரு அடையாளமான வஸ்துவை வைத்துக் கொள்ள வேண்டும். இக்காரணங்களால் தான் சூரிய நமஸ்காரங்கள் செய்யும் பொழுது திருஷ்டி அவசியமாகின்றது.