பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

முகவுரை


'சரீரமாத்யம் குல தர்ம சாதனம் என்ற விஷயம் பொது வாக எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அதனுடைய முழு அர்த்தம் மாத்திரம் இன்னவென்று இக்காலத்தவருடைய சரீர நிலைமையைப் பார்த்தால் சொல்ல முடியாது. சரீரமென்றால் ஆயுள் முடியவில்லை என்று நாட்களை கழிக்கும்படியான எலும்பு, மாமிசம் சேர்ந்த மூட்டையோ? அப்படியல்ல வென்று அநேக ருஷிவாக்கியங்களால் உறுதியாகக்கூறலாம். எந்த உபநிடதமானது, சத்யம் சரணம்கச்சாமி' என்று கூறியுள்ளதோ அதுவே (சத்வம் சரணம் கச்சாமி) என்றுங் கூறியுள்ளது. இவ்வளவு மாத்திரமன்றி நாயமாத்மா பலஹீனே நலப்யஹ' 'உதரே தாதனாத்மானம்' என்று உபநிடதங்கள் கூறுகின்றனவென்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் கூறியுள்ளார். இத்தகைய உபதேசங்களெல்லாம் வெறும்கட்டுக் கதைகளா யினவோ?

எதற்கு இப்படியாகியிருக்கும்? இந்து சமாஜத்தில் உபாசனை கிடையாது. உபாசனையென்றால் சாந்நித்யம். கம்யத்தை தன் மனதினால் பக்கத்தில் வைத்துக்கொள்வதற்கு உபாசனையென்று பெயர். இத்தகைய உத்தேசத்தை முடிப்பான் ஏற்பட்ட உபாசனைகளில் சூர்ய நமஸ்காரங்களும் உத்தமமான உபாசனையே. வெறும் அங்கசாதனையை தேகப்பயிற்சி என்று கருதுகிறார்கள். அத்துடன் மந்திர தியானங்களால் மனதைச்சரிப்படுத்திச் செல்லும்படியான வழி ஏற்பட் டால் மரம் வளர்ந்து புஷ்பங்கள் மலர்ந்தாற் போலாகும் என்பதில் ஐயமிருக்கின்றதா? அதற்காகவே ஞானிகள் இந்த புராதன சம்பிர தாயத்தைக்கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இத்தகையவர்களிலொருவரான - இந்த சூர்ய நமஸ்காரங்களின் முறைகளை, ஒளந்து சமஸ்தானத்தின் அரசரான ஸ்ரீபாலா சாகேப்பந்து பிரதிநிதி பி. ஏ. அவர்கள் 1927இல் முதலில் மகாராஷ்டிர பாஷையில் புஸ்தக ரூபமாய் வெளிப்படுத்தினார். மிக்க உபயோக மானதாய்த் தோன்றியபடியால் இந்த சூர்ய நமஸ்காரங்களின் வழிகளை ஒளந்து சமஸ்தானத்திலும் அப்படியே எல்லா மகாராஷ்டிர தேசத்திலும் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஏற்பாடாயிற்று. எல்லாருக்கும் பயன்படு