பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வதற்காக இந்த மகாராஷ்டிர புத்தகம் மேல் கூறியுள்ள ஆசிரியரால் ஆங்கிலேயே பாஷையில் எழுதப்பட்டு அப்பியாசக் கிரமங்களுடன் ஒரு சித்திரப் படத்துடன் கூட (Chart) அச்சிடப்பட்டிருக்கிறது.

இத்தகைய சிறந்த புத்தகமானது நம் தமிழ்நாட்டிலேயும் பரவ வேண்டு மென்று பல கனவான்கள் கேட்டுக்கொண்ட படியால் இச் சிறு புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யலானேன். தமிழ்ப்பாஷையில் மொழிபெயர்த்தற்கு உத்திரவு கொடுத்ததுமன்றி சித்திரப்படங்களின் அச்சுகளையும் (Blocks) உதவி செய்த பேருப காரியான ஸ்ரீ பாலா சாகேப்பந்து பிரதிநிதி அவர்களுக்கு நான் என் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகின்றேன். இப்புத்தகமானது, தென்னிந்தியாவின்கண் உள்ள எல்லா சனங்களுக்கும் உபயோகமாகும் பொருட்டுத் தெலுங்கு பாஷையிலும், கன்னட பாஷையிலுங்கூட மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. மலையாள பாஷையிலுங்கூட சீக்கிரத்தில் மொழி பெயர்க்கப்படும்.

இதனைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு ஒப்புக்கொண்ட (பங்களூர், மல்லேஸ்வரத்திலிருக்கும்); மைசூர் வித்யா இலாகா அரசாங்க உயர் தாரக்கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர், திருவாளர். என் - செங்கல்வராயன். எம். ஆர். ஏ . எஸ். (லண்டன்) அவர்களுக்கு நான் மிக்க வந்தனத்தைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் தமக்குக் கிடைத்த சொற்பகாலத்தில் மிக்க சிரமம் எடுத்துக்கொண்டு இப்புத்தகத்தைச் சீக்கிரம் வெளிவரும்படிச் செய்ததற்கு நான் மிகவும் சந்தோஷிக்கின்றேன். தமிழபிமானிகள் பலரும் இதனை ஆதரிக்குமாறு நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

இதிற் காணப்படும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளும்படிப் பெரியோர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

பங்களூர், இங்ஙனம்,

1928. எஸ். என். சிம்ஹ.