பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இதனால் நம்முடைய யௌவனமானது வாழ்நாள் வரைக்கும் ஒரே விதமாக இருக்கும். மனிதனுக்கு இதைக்காட்டிலும் சம்பத்து வேறொன்று மிருப்பதில்லை எப்.சி. ஹேடாக் எம்.சி; பி.எச்.டி. (E.C. Haddock, M.C., Ph.D.,) என்பவர் மனோசக்தியின் விஷயமாக எழுதியிருக்கும் தம்முடைய புத்தகத்தில் கூறியிருப்பதென்னவென்றால் : மனதும் சரீரத்தின் ஆரோக்கியத்திற்கு உட்படவேண்டி யிருக்கிறது. நமது சித்தமானது திடமாய் ஒரேவிதமாயிருந்தா லொழிய சரீரம் ஆரோக்கியமாயிருக்காது. ஒவ்வொரு ஆரோக்கிய நியமத்தையும் பிரயத்தன பூர்வமாக அனுசரித்துக்கொண்டு நடந்து வந்தால் மனோதிடமானது தானாகவே விருத்தியடையும். இம்மாதிரி , சூர்ய நமஸ்காரங்களின் முழுப்பலன்களையடைவதற்குச் சரீரத்தின் ஒவ்வொரு காரியத்திலும் மனதையுபயோகித்து ஆரோக்கியம், தீர்க்காயுள் இவைகளைக்குறித்து தியானித்திருத்தல் அவசியமென்பது இதனைப்படிப் பவர்களுக்குத் தெரியவரும். இக்காரணத்தினாலேயே, சூர்ய நமஸ்காரங்களுக்கு முக்கியமான அஷ்டாங்கங்களில் மனமும் ஒரு அங்கமாகச்சேர்ந்திருக்கிறது. ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொண்டுவரும் சூர்ய நமஸ் காரங்களைச் செய்வதில் எவனும் எப்பொழுதும் வெறுப்பு அடைய மாட்டான் என்பது இதனால் பெறப்படும். மதசம்பந்தமான வர்ணம். (Religious Tint) சிலசாஸ்திரிகளுக்கும் ஹிந்துக்களல்லாதவர்க்கும் இது ஒரு மதசம்பந்தமான ஆசாரம் என்ற ஒரு தடை தோன்றும். குளிப்பதைப்போல இது ஒரு காரியமாகும். இவ்விஷயத்தில் சிறிது ஆலோசித்துப்பார்க்கவேண்டும். ஆரோக்கிய நியமங்களுக்கும் மத சித்தாந்தங்களுக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லை. பீஜமந்திரங்களையும், வேதமந்திரங்களையும் விட்டு, பின்னே கூறியுள்ளபடி வேறு ஸ்வரங்களை யுச்சரித்துக்கொண்டு நமஸ்காரங்களைச் செய்யலாம். அப்படிச் செய்வதால் மிக்க பிரயோஜனம் ஏற்படாதிருக்காது. மிக்க பலன் உறுதியாய் ஏற்படும். சந்தேகமில்லை.