பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100 நமஸ்காரங்கள் வீதம் விடாமல் செய்து வருகிறார். அதற்கு இவருக்கு 30 நிமிஷங்கள் பிடிக்கின்றன. இவருங்கூட சீக்கிரமாக 600 அடி உயரமுள்ள ஒரு மலையின்மேல் ஏறி இறங்குகிறார். இதற்காகத்தினம் ஒன்றுக்கு இவருக்கு 40 நிமிஷங்கள் ஆகின்றன. இதனைத் தொடங்குவதற்கு முதல், தினம் இரண்டு வேளை உணவு எடுத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களான பிறகு இராப்போசனத்தை நிறுத்தி விட்டார். சூர்ய நமஸ்காரங்களால் இவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரயோஜனங்கள் அடியில் வருமாறு: (1) யாதொரு வியாதியாவது, துன்பமாவது இவருக்கு ஏற்பட வில்லை. முதலில் வருஷத்திற்கு ஒரு முறையாவது ஜலதோஷம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை. (2) சில சமயங்களில் கழுத்தின் பக்கத்திலும், இடுப்பிலும் சிறிது நோவு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது அது அடியோடு நின்றுவிட்டது. இப்பயிற்சியினால் முதுகெலும்பு, முதுகு, இடுப்பு இவை முதலியவைகள் பலப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணமாயிருக்கின்றது. (3) ஜீர்ணேந்திரியங்கள் தத்தங்காரியங்களைக் கிரமமாகச் செய்து வருகின்றன. (4) அவர் நடை யுடைபாவனைகளிலும், சக்தியிலும் 45 வயதானவரைப்போல இருக்கிறார். ஸ்ரீமான். பண்டரீநாத ஏ. இனாம்தாரரின் அனுபவம். இவர் தாம் 14 வயதினராயிருந்தது முதல் சூர்ய நமஸ்காரங் களைச்செய்து வருகிறார். விளையாட்டங்களில் இவருக்கு மிகுந்த உற்சாகம். நன்றாக நீந்துகிறார். இவருடைய சரீரத்தின் புஷ்டியெல்லாம் சூர்ய நமஸ்காரங்கள் செய்ததனால் ஏற்பட்டதே. இவருடைய எடை 150 பவுண்டு; (150 lbs.) எட்டுவருஷங்களாக ஒரே எடையுடன் இருக்கிறார். இவருடைய உயரம் 5 அடி 10 அங்குலம். இவருடைய பெற்றோர்கள் மிகவும் மிகவும் கவனிக்க வேண்டிய தாயிருக்கிறது.