பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருள் நமக்குக் கிடைப்பதில்லை. தக்காளிப்பழம், முள்ளங்கி, வெங்காயம் முதலிய பச்சைக் காய்கறிகளில் இது அதிகமாயிருக்கின்றது. "விட்டாமீன் சி" இது கீரைகளிலும் ரசம் பொருந்திய பழவர்க்கங்களிலும் மாத்திரம் கிடைக்கின்றது. கோஸ், தக்காளி, முள்ளங்கி, கிச்சிலி திராட்சை முதலியவைகளில் இருக்கின்றது. காய்கறிகளை வேகவைக்கக் கூடாது. பச்சையாகவே வைக்கவேண்டும். "விட்டாமீன்பி நமக்கு மிகவும் இன்றியமையாதது என்பதைக் காண்பிப்பதற்காக டாக்டர். பெல்பிரேசர் என்பவர் (Dr. Belf rage) சில உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார்: கடந்த பெரிய யுத்தத்தில் டென்மார்க் (Denmark.) தேசத்தவர்க்கு மாமிச ஆகாரம் கிடைக்காதபடியால், அவர்கள் பொட்டும், தவிடும் சேர்ந்த கோதுமை, அரிசி, கம்பு (Rye) இவைகளைத்தின்றே சீவிக்க வேண்டிய தாயிற்று. பால், வெண்ணெய், உருளைக்கிழங்கு, கீரை, காய்கறி இவைகளென்னமோ தேவையான மட்டும் கிடைத்துக்கொண்டிருந்தன. கட்டாயமாய் உட்கொள்ள நேரிட்ட இவ்வாகாரத்தினால் அவர்களில் 100க்கு 34 பேர்கள் இறப்பதில் குறைந்து வந்தார்கள். (Death-rate was reduced to 34% by this Compulsory diet.) சென்றயுத்தத்தில் மெசபடோமியாவில் (mesopotomia) இருந்த ஆங்கிலேய சேனைக்காரர்களுக்கு 'பெறி - பெறி" (Berri - Berri) என்ற வியாதியானது அதிகமாக ஏற்பட்டிருந்தது. வெள்ளை மாவு, டின்களில் அடக்கஞ் செய்யப்பட்டிருந்த மாமிசம் முதலிய இதர ஆகா எங்கள் மாத்திரம் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டுவந்தன. பால், முட்டை, காய்கறி, பழம் முதலியன அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதிர்ஷ்ட வசத்தினால் வெள்ளை மாவு தீர்ந்து போயிற்று. வீடுகளில் இயந்திரங்களினால் அரைக்கப்பட்ட மாவே அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று. இம்மாவில் தான்யங்களின் பொட்டு, தவிடு முதலியவைகள் முழுமையும் சேர்ந்திருந்தபடியால் "விட்டாமீன் பி அதிகமாயிருந்தது. இதனால் வியாதி ஏற்படாதிருந்தது மன்றி ரோகமடைந்திருந்தவர்களும் குண மடைந்தனர். தான்யங்களில் தவிடும் பொட்டும் சேர்த்து உபயோகப்படுத்த வேண்டு மென்பதற்கு இதைக் காட்டிலும் தகுந்த உதாரணம் வேறு ஒன்றுங் கிடையாது. விட்டாமீன் பி விஷயமாகக் குரங்குகளின் மேலும் இதர பிராணிகளின் மேலும் சில பிரயோகங்கள் நடந்திருக்கின்றன.இ