பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

Preliminary Instructions. சூர்ய நமஸ்காரங்களின் விஷயமாக அனுசரிக்க வேண்டிய சில முன்னான போதனைகள். (1) சூர்ய நமஸ்காரங்களைத் தொடங்குவதற்கு முன் உங்களுடைய சரீரத்தின் நிறையை (Weight) எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வயித்தியர் மூலமாய் உங்களுடைய தேக ஸ்திதியை நன்றாய்ப் பரீட்சை செய்து கொள்ளுங்கள். (2) கழுத்து, புயங்கள், முழங்கை , மார்பு, வயிறு, இடுப்பு, தொடை முதலிய அவயவங்களின் அளவை எடுத்துக்கொள்ளுங்கள். (3) சூர்யநமஸ்காரங்களை ஆரம்பித்தபின் 3 அல்லது 6 மாதங்களுக்கொருமுறை சரீரத்தின் நிறை, (Weight) அவயவங்களின் அளவு, இவற்றை ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். (4) டீ. காபி, கோகோ, புகையிலை முதலிய உத்தீபனஞ்செய்ய வல்ல இலாகிரி வஸ்துக்களை நீக்கிவிடுங்கள். (5) சூர்யநமஸ்காரங்களைச் செய்யுங்கால் சிறிது உடுப்பையே அணிந்து கொள்ளவேண்டும். (6) காற்று நன்றாக வீசும்படியான திறந்தவெளிகளிலே சூர்ய நமஸ்காரங்களைச் செய்யவேண்டும். (7) தண்ணீரில் (குளிர்ந்த நீரில்) குளியுங்கள். (8) உணவைக்கிரமப்படுத்திக் கொள்ளுங்கள். (9) சுத்தமான டாம்பீகமற்ற வாழ்க்கையை நடத்துங்கள்.