பக்கம்:சூழ்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சூழ்ச்சி ஹமீர்சிங் : எதுவா யிருந்தாலும் சொல்......தயங்க வேண்டாம். கமலாதேவி (உணர்ச்சியோடு) : அதை எப்படிக் கூறுவ தென்று தெரியவில்லை...நான் பாவம் செய்தவள்... ஹமீர்சிங் மால்தேவின் மகளாகப் பிறந்தது ஒரு பாவந்தான்...அதை இனி மறந்துவிடு. உன்னத் தொட்டு எப்போது தாலி கட்டினேனே அது முதல் நீ என் மனேவி... கமலாதேவி : என் தந்தை உங்களை ஏமாற்றி இந்த மணத்தை முடித்துவிட்டார். என்னலும் அதைத் தடுக்க முடியவில்லை. (தேம்பிக் கொண்டு) ராணு, கான் ஒரு விதவை...முன்பே ஒருவனுக்கு நான் வாழ்க்கைப் - به ۰ - 57 تا سسtسس سما ஹமீர்சிங் (திடுக்கிட்டுக் ே காடமாக) : ஹா, என்ன சொன் ய்ை? நீ ஒரு விதவையா? கமலாதேவி : ராணு, என்ன மன்னிக்கவேண்டும். ஹமீர்சிங் (கோபத்தோடு) ; உன்னை ம ன் னி ப் ப த ? எனது வம்சத்திற்கு மாசு கொண்டுவந்த உன்னே இதோ வாளால் வெட்டி வீழ்த்துகிறேன் பார்... (பக்கத்தில் வைத்திருந்த வாளே எடுத்துக் கொண்டு வேகமாக வருகிருன்.) கமலாதேவி (படபடப்புடன்) : ராணு ல கஷ் ம ண சிங்கின் பெயரால் ஆணையிடுகிறேன். அவருடைய வீர வம்சத்தில் பிறந்த நீங்கள் ஒரு பெண்ணையா கொலை செய்யப் போகிறீர்கள்? பகைவர்களின் குருதியிலே தோய்ந்த வாளைப் பெண்ணின் ரத்தம் பட்டுக் கேவல மடையச் செய்யாதிர்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/38&oldid=840698" இலிருந்து மீள்விக்கப்பட்டது