பக்கம்:சூழ்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி - 45. பாடினி : எப்படியா : சுவருக்குக் கூடக் காதிருக்கும் தெரியுமா ? இரண்டாம் வீரன் : காதிருந்தாலும் காயில்வரத்துச் சுவர் ராளு ஹமீர்சிங்குக்கு அப்படித் துரோகம் பண்துை. முதல் வீரன் : காயில்வரத்து மண்ணே மிதிச்சவன் வேறு தேசத்தவன இருந்தாலும் அவன் ராணுவுக்குத் துரோகம் கினேச்சாலும் ராணி கமலாதேவிக்குத் துரோகம் கினைக்கவே மாட்டான். இரண்டாம் வீரன் : சித்துரளிலே இருக்கிறவர்கூட நம்ம ராணி பக்கங்தாண்டா. பாடினி : இப்படியெல்லாம் நீங்கள் வெளியிலே பேசக் கூடாது. பேசினல் ராணி கமலாதேவியின் திட்டமெல் லாம் கெட்டுப்போகும். முதல் வீரன் சரி, அது கிடக்கிறது. ஒரு பாட்டுப் பாடேன். இரண்டாம் வீரன் : ஆமாம், உ ன் பா ட் டு எனக்கு ரொம்பப் பிடிச்சுது. பாடினி . இப்போ எனக்கு நேரமில்லே. நான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருக்கவேனும். அடுத்த தடவை வரும்போது பாடுகிறேன். இப்போது முதலில் ராணி யைப் பார்க்கவேண்டியது அவசியம். முதல் வீரன் : என்ன, விசயம்? எங்களுக்குச் சொல் லேன். பாடினி : எதுக்கு ? வீதியிலே கின்று பகிரங்கமாகப் பேசவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/49&oldid=840710" இலிருந்து மீள்விக்கப்பட்டது