இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
70 சிந்தனை செய்தே பார்த்தவர்-எத்தனை? பானைஇல் லாமலே சமைக்கப் பார்த்திடும் பூனை குணத்தவர் பாரிலே நிறைந்தனர். எவர் செய்தாலும் தவறு தவறுதான் தவறினைச் சுட்டுதல் நமக்கது கடனே!. "தேசிய நினைவினை சிந்தையில் ஏற்றுதல், தேசிய வழியிலே செயலினை மாற்றுதல், தேசம் காத்திடத் தியாகம் செய்திடும் ஆசையை மனதிலே ஆழ விதைத்திடல், தேசியச் சின்னம் தாயின் தாலிபோல் வீசும் பேரொளி, எனவே எண்ணிட" மக்களை மாற்றுதல் கற்றவர் கடமை! குக்கலை ஒதுக்குவோம் குலைப்பது அதுகடன். இன்றே அப்பணி எடுத்தே ஒன்ருய் குன்றில் விளக்கென அறத்தின் இலக்கென பாரதத் தாய்க்குப் பழம்புகழ் சேர்க்க பாரதப் பண்புடை படைதனைத் திரட்டுவோம்! தாயகம் வாழ்ந்தால் வாழ்வோம்; வீழ்ந்தால் தாயகத் துடனே வீழ்வோமே!