பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆக்கம் iè3; அரங்கு மிடற்றிசை (வாய்ப்பாட்டு), நரம்பிசை (வயலின்), முழவிசை (மத்தளம்) ஆகிய சொற்கள் இப்பொழுது தமிழ் காட்டிற் பெருவழக்கில் உள்ளன. பிரேரேபித்தல்; ஆமோதித்தல் ஆகிய சொற்கள், முன்மொழிதல், பின்மொழி தல் என்றவகையில் வழங்குவதைக் காண்கிருேம். மின் சாரம், மின்விளக்குகள், கலைக்களஞ்சியம், கவிதைக் களஞ் சியம், கதைக் களஞ்சியம் முதலிய சொற்கள் வேண்டிய வேண்டிய அளவில் அமைக்கப்பட்டு விட்டன. ரேடியோ என்பதை வானெலி எனவும், பிரபாத் என்பதை இசைக்கதிர் எனவும், "லைட்மியூசிக்' (Light music) என்பதை,"மெல் விசை எனவும் வழங்க நாம் கற்றுக்கொண்டு விட்டோம். மாதந்தோறும் அல்லது சில மாதங்களுக்கு ஒருமுறை வரு கின்ற பத்திரிகைகளே ‘இதழ்’ எனவும், 'மலர்” எனவும் பெயரிட்டு வழங்கக் கற்றுக்கொண்டிருக்கிருேம். வரிகளில் விலங்குவரி, வருமானவரி, விளக்குவரி என்ற: பெயர்கள் வழக்குக்கு வந்துவிட்டன. காண்டிராக்ட்: (contract) என்பதை ஒப்பந்தம் என்றும், "டெண்டர்: என்பதை ஒப்பந்தப் புள்ளி என்றும், "கொட்டேசன்: (quotation) என்பதை விலைப்புள்ளி என்றும் சொல்லும் வகை அறிந்துவிட்டோம். "அஜண்டா என்பது கிகழ்ச்சி கிரல், "மினிட்ஸ்' என்பது கிகழ்ச்சிக் குறிப்பு, ஜி. ஒ. என்பன அரசாங்க ஆணைகள், எக்சிடிராக்ட்' (Extract), என்பது எடுகுறிப்பு, காபி (Copy) என்பது படி அல்லது பிரதி, ஜெனரல் மீட்டிங் என்பது இயல்புக் கூட்டம் 'அர்ஜண்ட் மீட்டிங்' என்பது சிறப்புக் கூட்டம் என்ற வாறெல்லாம் வழங்கத் தலைப்பட்டுவிட்டன, எஞ்சினியர் பொறியர் எனப்படுகிருர். ‘இனிஷியல்’ என்பது தலைப்பு எழுத்துக்கள் என்ற வகையில் வழங்குகிறது. கலைத்துறையிலும் அதிர்வெண் (Frequency) முதல் soffray Groot (Fundamental frequency) @lu bopé soon Gajor (Natural frequency) opio offirGlaucor (Frequency