பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒரு தனிநூலா விரிவது மேவிடும் தமிழுல கத்தீர்!அமிழ்தமாம் இதனை எவ்வெவர் தாமும் எய்திட எண்ணி விரித்து விளக்கி பரப்பல்நும் அருளே! பள்ளி மாணவர் பலரும் பயனுறல் கல்வி நெறியில் காட்டு பேரருளே!


கவியரசு, அரங்க-வேங்கடாசல

முன்மொழி.

செந்தமிழாற்றுப் படை யென்னும் இந்நூல், 'ஆற்றுப் படை' என்னும் நூல் வகையைச் சாரும். ஆற்றுப் படை யென்பது : ஒருவரிடம் சென்று நன்மை பெற்று வரும் ஒருவன், வழியில் எதிர்ப்படுந் தன்னொத்த மற்றொருவனை நோக்கி, யான் இன்னாரிடஞ் சென்று இன் னின்ன பொருள்கள் பெற்று வருகிறேன் : நீயுஞ் செல் லின் பெறலாம் என்று மொழிந்து, அவனை அவரிடம் வழிப்படுத்தி (வழிகாட்டி) அனுப்புவதாகும். ஆறு=வழி: படை=படுத்தல். தொல்காப்பியப் புறத்திணை-86-வது நூற்பாவில், - - கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவு றீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும் ” என ஆற்றுப்படை இலக்கணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரையாசிரியர் எழுதியுள்ள உரை : 'ஆடன் மாந்தரும் பாடற் பாணரும் கருவிப் பொரு நரும் இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற் பாலாரும், தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்' என்பதாகும். - - -