உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f03 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

தொழிலே நாங்கள் சினத்தது கூட இல்லை. எங்களுக்குப் பணம் என்ருலே என்ன என்பது தெரியாது. ஒவ்வொன்றுக்கும் தேவைக்குமேல் தான்ியம் குவிந்து கிடக்கும்,' என்ருன்.

'அப்படியானல் உன் நிலம் எங்கே இருக்கிறது ? நீ இத் தகைய தான்ியத்தை எங்கே பயிரிட்டாய் ?” என்று அரசன் கேட்டான்.

'என் கிலமா! கடவுள் படைத்த உலகம் முழுவதும் என் லுடையதுதான்். எங்கே எங்கே உழுதேனே, அங்கே அங்கே எல்லாம் நிலம் எனக்குச் சொந்தமே. கிலத்தை வாங்குவது, விற்பது என்பது அந்தக்காலத்தில் இல்லை. தனது என்பது அக்காலத்தில் ஒன்றுமில்லே. உழைப்புத்தான்் அக்காலத்தில் ஒவ்வொருவருக்கும் சொந்தமாய் இருந்தது," என்ருன் கிழவன்.

'இன்னும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும் : அப்பொழுது இத்தகைய பெரிய தான்ியத்தைத் தந்த சிலம் இப்பொழுது ஏன் தருவதில்லை ? உன் பேரன் இரண்டு தடிகளே ஊன்றிக்கொண்டு கடக்க, உன் மகன் ஒரே தடியை ஊன்றிக்கொண்டு கடக்க, நீ மட்டும் ஒன்றின் உதவியு மில்லாமல் கடக்கும் ஆற்றல் பெற்றிருக்கிருயே! உன் கண்கள் நல்ல ஒளியை உடையனவாய் இருக்கின்றனவே! உன் பற்களும் நல்ல நிலையிலிருக்கின்றனவே பேச்சும் தெளிவாகவும், கேட் பதற்கு இனிமையாகவும் இருக்கின்றதே! இந்த மாறுதல் களெல்லாம் எப்படி உண்டாயின?’ என்று கேட்டான் அரசன்.

"மக்கள் தங்கள் உழைப்பினல் வாழ்வதை விடுத்து மற்றவர்கள் உழைப்பைக்கொண்டு வாழத்தொடங் கிய நாள் முதல் இந்த மாறுதல்கள் ஏற்படலாயின. பழைய காலத்தில், மக்கள் கடவுள் சட்டத்தை மீருமல் வாழ்ந்து வந்தார்கள் தங்கள் உழைப்பால் கிடைத்தவற்றைத் தங்களுடையவை என்று பாராட்டி வாழ்ந்து வந்தார்கள் : மற்றவர்கள் உண்டாக்கியவற்றைத் தங்களுடையவை என்று எப்பொழுதும் வஞ்சித்ததே இல்லை," என்று கிழவன் பதில் கூறினன்.