உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

f08 செந்தமிழ் இலக்கியத் திாட்டு-11

அனுசரிச்காதவர், மிக்க திறமை வாய்ந்திருந்தும், வீளுக விரோதிகள் ஏற்பட்டு இடர்ப்படுவாராகின்றனர். மற்றவர் களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி கடப்பதனுல் நமக்கு மகிழ்ச்சி யே உண்டாவது அநுபவத்தில் பிரத்தியகூடிமாகும்.

இங்ங்னம் கடப்பதில் முக்கியமாய்க் கவனிக்கத்தக்க உபா யங்களுள் ஸம்பாஷணை ஒன்று. எவரெவரோடு எதெதை எவ்வளவெவ்வளவு பேசலாம் என்பதறிந்து, நமக்குரிய வரம் பிலே கின்று பேச வேண்டும். பேச்சின் கிமித்தமாக வீண் வார்த்தை பேசுவது குற்றம், அதைக்காட்டிலும், பேசா திருத்தலால் பிழை ஒன்றுமில்லை. பரிஷ்காரமாய்ப் பேசாம லிருப்பதும் யுக்தமல்ல. ஆவதற்கும் பேச்சே காரணம் : அழி வதற்கும் பேச்சே காரணம். ஆகையால், முன் பின் பார்த்து மிதமாகப் பேசுதல் வேண்டும். மிதமாகப் பேசுவதையும் பட் டுக்கத்தரித்தது போல ஒழுங்காகப் பேசுதல் வேண்டும்.

நாம் சொல்வதை மற்றவர்கள் கவனிக்கும் விதமாகச் சொல்லுதல் வேண்டும். வித்தியா மமதை திரவிய மமதை முதலிய காரணங்களால் பராமுகமாக இருப்பார் சிலர் உண்டு, நாம் அதைப் பாராட்டாமலிருப்பதே நன்மை. மற்றவர்கள் சொல்வதை நாம் கவனமாகக் கேடபவர்கள் என்றறிந்தால், நம்மை உருக்கமுடையவர்கள் என்று கொண்டு, நம்மிடம் அன்பு அதிகரித்துச் சிலர் தம்முடைய கஷ்டகஷ்டங்களை நம் மிடத்தில் முறையிட்டுக்கொண்டு, தக்க யோசனை சொல்லும் படி வேண்டுவர். அதனல், அவர்களுக்கு ஹிதமான ஆலோ சனைகளை எடுத்துரைத்தலான நன்மை நேரிடும்.

சாராயத்தை வார்த்துப் பூராயம் கேட்பார் சிலர். எச்ச ரிக்கை அற்றிருக்கிற சமயம் பார்த்து ஏதோ ஒன்றைக்கேட்டு, நாம் வெளியிடலாகாத ரகசியத்தைக் கிரகிக்க முயல்வர் சிலர். ஆதலால், விவிைடைகளேக்கொண்டு அவர்களுடைய நோக்கத் தை உள்ளபடி அறிந்தே, வெளியிடக்கூடிய விஷயங்களை வெளியிடல் வேண்டும் மற்றவைகளே அடக்கி வைத்தல்வேண் டும். மனத்தில் இருக்கும் ரகசியம், மதிகேடனுக்கு வாயிலே: