உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் மரமும் கச்சு மரமும் 3 if

யாகத் தெண்ணிரை வாரி வழங்கும் தன்மை போல அடுக்கடுக் காக அலேகள் கரையருகே வந்து சேர்ந்தன. தாகம் தணிந்து மன மும் மெய்யும் குளிர்ந்த பின்னர், இருவரும் அக்குளத்தின் ஈரக் கரையில் இனிதமர்ந்து அங்கு வீசிய இளங்காற்றை நுகர்ந்து இன் புற்ருங்கள். அப்போது அவ்வாவியின் அருகே கண்ணே யும் கருத்தையும் ஒருங்கே கவரும் கணிகளேத் தாங்கி, குளிர் கிழல் விரித்து கின்ற ஓங்கிய மரமொன்றைக் கண்டார்கள். அதன் நிழலில் தங்கி இளேப்பாற எண்ணி இருவரும் அங்குச் சென் ருர்கள், கதிரவன் வெம்மையைத் தடுப்பதற்கு ஓங்கிய பாசிலேப் பந்தர் வேய்ந்தாற்போல விளங்கிய மரத்தின் கிழ வில் இருவரும் மேலாடையைப் பாயலாக விரித்து மெல்லிய இளங்காற்றில் இனிது துயின்றார்கள். மாளிகையில் அனிச்ச மலரினும் மெல்லிய மஞ்சத்தில் துயிலும் அரசிளங்குமரன், இலகளாலும் தழைகளாலும் அமைந்த இயற்கைப் பந்தரின் கீழ் இனிது துயின்ருன். அம்மரக் கொம்புகளில் பைங்கிளிகள் தாவி விளேயாடுவதும் குயில்கள் மறைந்து நின்று கூவுவதும் மனத்தை மிக மகிழ்வித்தன. இத்தகைய இனிய கிழலில் இரு வரும் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்கள், சில நாழிகை சென்ற பின்னர், தோழன் துயிலொழிந்து எழுந்தான்். எங்கும் பசுமை கிற மும், பறவை ஒலியும், பழத்தின் மணமும் நிறைந்திருப்பி னும், பசியின் கொடுமையைப் பொறுக்கலாற்ருது வருந்தின்ை: கற்பகத் தருவெனக் கவின் பெற விளங்கிய மரக்கொம்புகளை நயந்து நோக்கினன் , அவற்றில் பொன் நிறமான பழங்கள் கொத்துக் கொத்தாய் எம்மருங்கும் இலங்கக் கண்டான் : அப் பொழுதே அம்மரக் கிளைகளின் வழியாய் மேலே சென்று இரு வரது அரும்பசியைத் தீர்ப்பதற்குப் போதிய கனிகளைக்கொய்து வந்து துணைவனைத் துயிலினின்றும் எழுப்பினன். கணிக ளின் நிறத்தைக் கண்டும், நறுமணத்தை நுகர்ந்தும், தீஞ்சுவை யைத் துய்த்தும் இருவரும் இன் புற்ருர்கள். பின்னும் சிறிது பொழுது அம்மரததின் நிழலில் அமர்ந்திருக்கையில், அரச கும ரனது தலை கோய் மிகுந்தது. தலை நோய் தீர்க்கும் வகையறி யாது, தோழன் திகைத்து, எவரேனும் அவ்வழி வருவாரோ என்று எதிர் நோக்கி இருந்தான்். இவ்வாறு இருக்கையில் அவ் விடத்தை கோக்கி ஒரு முதியோன் வந்து சேர்ந்தான்். தலைக்