உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

குத்துத் தீர்க்கும் மருந்து உங்களிடம் உண்டோ ?’ என்று தோழன் அவனே வினவினன். அப்பொழுது முதியோன் புன் னகை பூத்து, கையில் வெண்ணெயிருக்க கெய்தேடி அலேயும் வெள்ளியரும் உண்டென்பதை இன்று நேராக அறிக்தேன் ! இம்மரத்தின் பட்டையில் சிறிது செதுக்கி அதன் சாற்றைத் தலையிற் பிழிந்தால் எவ்வகைத் தலைக்குத்தும் தீர்ந்துவிடுமே !” என்று சொல்லி அப்பாற்சென்ருன், இதை அறிந்த துணைவன் அளவிலா மகிழ்வடைந்து, அம்மரப்பட்டையின் சாற்றை மன் னன் மைந்தனது தலையிற்பிழிந்தான்். சிறிது நேரத்தில் அரசி ளங்குமரனது தலைக்குத்து அறவே ஒழிந்தது. -

அங்கிலேயில் தோழன், தலே நோய் தீர்ந்த தனி இளங்கும ான நோக்கி, ஐயனே, காம் இருவரும் கானகம் சென்றது முதல் இது வரையில் கிகழ்ந்த செயல்களே கினேவில் கோக்கு வோ மாயின், இவ்வுலகியல் இனிது விளங்குவதாகும். நாம் பசியா லும் வெயிலாலும் கலிந்து மெய் தளர்ந்து வருந்தும் கிலேயில் இப்பொய்கை நம்மை அன்புடன் அழைத்து இன்முகம் காட் டித் தாகம் தணித்துத் தளர்வை மாற்றியது. அப்பால் இக் கல்மரம், காம் தங்கி இளைப்பாறக் குளிர்நிழல் தந்து பசியாறப் பழங்கள் அளித்துத் தலே நோய் தீர்க்கவும் தனி மருந்தாய் அமைந்தது. இத்தன்மையை கோக்குங்கால், கல்லார் கைப் பட்ட செல்வத்தின் தன்மை நன்கு விளங்குவதாம். வறுமை யால் வருங்கி வந்த விருந்தினரை இனிய முகத்தோடு ஏற்று அவ ரது குறையை கிறை செய்வதே அறிவுடைய செல்வர் செயலா கும், ஆற்று வழியாகவும் ஊற்று வழியாகவும் கன்னிரைத் தன் அகத்தே கிரப்பிக்கொள்ளும் பொய்கை போல, அறிவுடை யார் பழுத று வழிகளால் ஈட்டியபெரும்பொருள் கிறைந்த பண் இணகளாய் விளங்குவார்கள். நீர் கிறைந்த பொய்கை எப்பொ ழுதும் தண்மை வாய்ந்து விளங்குதல் போல, அறிவுடைய செல்வரும் ஈரம் வாய்ந்த நெஞ்சினராய் இலங்குவார்கள். தாகத் தால் வருந்துவோருக்குத் தடையின்றி நீர் வழங்கும் தடாகம் போல, கல்வியும் செல்வமும் பூத்த மேலோர், வறிஞர்க்கு வரையாது பொருள் வழங்கும் வள்ளல்களாய் விளங்குவார்கள், இன்னும், தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் வாழும்