உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£14 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

காளும் இலகளும் தழைகளும் இல்லாமையால், விலங்குகளும் இதனடியில் கில்லாது விலகிப்போம்: கண்களைக் கவரும் வனப்பு வாய்ந்த இக்கனிகள் கச்சுக் கனிகளாய் இருத்தலின், உண்டாரைக் கொல்லும் தசையனவாம் : இம்மரத்தின் கொம்புகளே விறகாக வெட்டி எரிப்பதற்கும் இதனிடம் அமைந்த முள் இடையூருயிருக்கின்றது; இப்பாழ் மரம் கடுங் காற்றில் அகப்பட்டு முரிந்து வேரற்று விழ வேண்டுமென்று இவ்வூரார் இறைவனே நாளும் வழிபடுகின் ருர்கள். இம்மரம் என்று விழுமோ, அன்றே இவ்வூருக்கு கன்ருகும்," என்று அதன் தன்மையை விரிவாகக் கூறிமுடித்தான்். இதைக்கேட்ட அரசிளங்குமரன், முன் தங்கி இக்ளப்பாறிய மரத்தின் இனிமை யையும், இம்மரத்தின் கொடுமையையும் ஒப்பு நோக்கி கச்சு மரத்தில் அமைந்த கன்னிறக்கனிகள் பேதையர் கைப்பட்ட செல்வம் போலப் பிறர்க்கு இடர் விளைவிப்பனவாகும் என்று எண்ணி வருந்தினன் :

'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.”

என்னும் பொய்யா மொழியின் பொருளைத் தெளிந்தான்். இத் தகைய செல்வம் கிறைந்த பேதையர், கிலத்துக்குச் சுமையாக வும், உலகத்திற்கு உற்ற தீமையாகவும் அமைந்திருத்தலால், அன்னர் அழிந்து ஒழிவதே காட்டுக்கு நன்மை பயப்பதாகும். அறிவுடைய செல்வனே உலகம் போற்றும் அறிவற்ற செல் வனே உலகம் தாற்றும் அறிவுடைய செல்வனது ஆக்கம் கண்டு உலகம் களிக்கும் : அறிவிலாச் செல்வனது அழிவைக் கண்டு உலகம் மகிழும் அறிவுடைய செல்வன் தன் பொருகளத் தக்கவ்ாறு பயன்படுத்த இம்மையிற்புகழும், மறுமையில் இன்பமும் எய்துவான்; அறிவிலாச் செல்வன் பயன்பட வாழும் பண்பறியாப் பேதையஞய் இம்மையிற்பழியும், மறுமையில் துன்பமும் எய்துவான்.

“நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னுதே

கல்லார்கண் பட்ட திரு'

என்பது என்றும் பொய்யா மொழியேயாகும்.