உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரா f 23

விடம் கூறி, அன்னவர்க்கே அத்திருப்பணிப் பொறுப்பையும் அளித்தனன்.

எல்லோராக் குகைக் கோயில்களின் நடுநாயகமாய்த் திகழ் வது கைலாயக் கோயிலேயாம். இதனைப் பதிருைவது குகைக் கோயிலாக வரிசை இலக்கம் இட்டுக் குறிப்பிடுவது வழக்கம். இக்கோயில் திருப்பணி முடிவுற்றுப் பதினுெரு நூற்ருண்டுகள் கடந்துவிட்டன. பூமத்தியரேகையில் எழுகின்ற கதிரவனின் கொடிய ஒளியாலும் பருவ மழைகளாலும் பல்லாண்டுகளாகத் தாக்குண்ட போதிலும், இக்கைலாயக்கோயில் பழுது ருது இன் றளவும் இருப்பதே இயற்கை அதிசயம் எனலாம். அன்றியும், பாரத நாட்டில், முகமதியப் படை சென்ற தலங்களில் இருந்த கோயில்கள் தகர்ந்து மண்ணுேடு மண்ணுய் அழிந்து ஒழிய, இக் குகைக் கோயில்கள் அவ்வளவாக அழியாமல் தப்பிப் பிழை த் திருப்பதும் பெருவியப்பன்ருே எனினும், விக்கிரக ஆராதனைக் குப் பகைவராய்க் காலங்தோறும் ஈங்குப் போந்தவர்கள் தமது கைவன்மையை இங்கேயும் காட்டாமற்போகவில்லே.

எல்லோராவின் குகைக்கோயில்களுள் தனி மாண்புடைய தாய்க் கம்பீரமான தோற்றத்தோடு திகழ்கின்ற கைலாயக் கோயிலின் கண் ஆயிரக்கணக்கான சிற்பப் பொலிவுகளைப் பார்க் கலாம். சங்குளள காட்சிகள் யாவும் காணுந்தோறும் வியப் பைத் தருபவை. ஒவ்வொரு சிற்ப வேலப்பாடும் தனித் தனி சிறப்போடு அமைந்தது. இவற்றை ஆக்கிய சிற்பிகளின் ஆர்வத்தையும் சிற்பக்கலேயில் அவர் தமக்கு இருந்த பத்தியை யும் ஈங்குள்ள சிற்பங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

நாம் கைலாயக் கோயிலில் நுழைந்ததும் முதன்முதல் இரண்டுமாடிகளோடு விளங்கும் நந்தி விமானத்தைக் காண் போம். இந்த விமானம் முழுவதிலும் வெகு உயர்ந்த சிற்ப வேலேயின் நுட்பங்கள் நிறைந்துள்ளன : செதுக்கு வேலையும், பிறவும் வெகு கவர்ச்சியாய் அமைந்துள்ளன. இந்த விமானத் தின் அடியில் சிவபெருமானது ஊர்தியாகிய கந்தியின் சில் உருவம் வெகு அழகாய் அமைந்துள்ளது. இந்த விமானத்தின் ஒரு பக்கத்தில் கிற்கும் கோபுரத்தையும், மற்றொரு பக்கத்தில் இருக்கும் தலைமைக் கோயிலயும் சேர்த்து இணைக்கின்ற கற்