உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f24 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

பாலம் ஒன்று அமைந்துள்ளது. கூடத்தின் இரு மருங்கிலும் ஒரே அளவில் ஒரே அமைப்பாகச் செய்யப்பெற்றிருக்கும் இரண்டு கற்றுரண்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடு விளங்குகின்றன. இக்கற்றுாண்கள் நாற்பத்தொன்பது அடி உயரம் உடையவை. இவற்றின் வடிவமைப்பு வெகு கேர்த்தி யாய் இருக்கின்றது. இவற்றின் மீது சிவபெருமானின் முத் தலச் சூலங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தூணின் அடியி லும் முழு அளவிலே செய்த கல்யானையொன்று கிற்கின்றது. இவை இமய மலையின்கண் இடையருது கவிகின்ற கார்முகிலக் குறிக்கின்றதெனச் சிலர் கருதுகின்றனர். இக்கம்பங்களின் இடப் பக்கத்தில் கங்காதேவியின் ஆலயம் முற்றுப்பெருதிருக் கின்றது. இவ்வாலயத்தினுள் பல வகைச் சிற்பமாகச் செதுக்கி யிருக்கின்ற சரஸ்வதி, கங்கை, யமுனே ஆகிய மூன்று நீர்த்தேவி யரின் சிலேயுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மூன்று திரு கதிகளும் இயக் குன்றுகளினின் ற எழுகின்றவையாதலின், துய நதிகளாய் விளங்கு வை, சிற்பி, இத்தாய சதித் தேவிய ரின் சிற்பத்தைச் சூழ்ந்திருக்கும் நெற்றி மாடங்களில் தண்ணிர்த் தொட்டிகளே வெகு அழகாய்ச் செதுக்கியிருக்கிருன்.

சூழவுள்ள சிற்ப அலங்காரக் குவியல்களின் நடுவண் தொண்ணுாற்ருறு அடி உயரமுடையதான் விமானத் தோடு அமைந்த கைலாச நாதரது ஆலயம் அமைந்துள்ளது. இக் கோயிலின் விமானத்திற்கு அமைந்த அடிப்பீடம் இருபத்தேழு அடி உயரமுடையது. இந்தப் பீடத்தின் பக்கங்களில் தந்தங் களையும், துதிக்கைகளையும், தலைகளையும், பாதி உடலேயும் வெளியே டேட்டிக்கொண்டு தோளோடு தோள் பொருந்த கிற் கின்ற கல் யானேகள் வரிசையாய் அமைந்துள்ளன. கைலாய விமானம் முழுவதையும் காற்புறமும் வரிசையாக கிற்கின்ற கல் யானைகளின் முதுகின்மேல் தாக்கி வைத்திருப்பது போன்ற காட்சியைச் சிற்பி காட்டியிருக்கின்ருன். இந்து சமய விரோதி களின் கருங்கைகளால் பல யானைகளின் துதிக்கைகளும், தக் தங்களும், தலைகளும், காதுகளும், கால்களும் இரக்கமின்றித் தகர்க்கப்பெற்றுப் பாழான போதிலும், சில யானைகள் பழுது படாமல் இன்றும் இருக்கின்றன. இந்த மதகரிப் பீடத்தின்