உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரா 125

மேல் அமைந்துள்ள கைலாய விமானம் உலகத்தின் எட்டாவது அதிசயமெனப் புகழ் பெற்றது.

கைலாயக் கோயிலுள் ஐம்பத்து முன்று சம சதுர அடி அளவுடைய மணிக்கூடமும், கூடத்தின் கூரையைத் தாங்கும் பதினுறு தூண்களும் இடையரு வியப்பை விளக்கின்ற அரிய பெரிய சிற்ப வேலைப்பாடுகளோடு விளங்குகின்றன. இக் கூடத்தினின்று மூலத்தான்த்திற்குச் செல்கின்ற மணி வாயில் முழுவதும் சந்தனமரத்தில் செதுக்கிக் காட்டுகின்ற சிததிர வேலேப்பாடுகளேயெல்லாம் சிற்பி வெகு திறமையாகச் செதுக் கிக் காட்டியிருக்கின்ருன்.

இந்த மணிவாயிலைக் கடந்ததும் ஆறு படிகள் இறங்கில்ை, கைலாயப்பெருமானர் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக் கும் உட்கோயிலின் கண் புகலாம். இந்து சமயக் கோயில்களின் மூலத்தான்ம் இருள் மிகுந்த சிறு அறையாகவேயிருக்கும். அவ் வாறே இவ்விடத்திலும் மூலத்தான்ம் அமைந்துள்ளது. இத னுள் சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். உட்கோயிலின் திண்ணிய ஒற்றைக் கற்சுவர்களின்மீது நடு விமானம் வெகு மாட்சியான சிற்பப் பதுமைகளோடு அமைந்துள்ளது. கர்ப்பக் கிருகத்தைக் குழச் சுற்று மண்டபம் அமைந்திருக்கின்றது. இதன் கண் பிள்ளையார், உமையம்மையார், முருகர் முதலி யோர் ஆலயங்களும், அவற்ருேடு வேறு இரு கோயில்களும் காணப்படுகின்றன. கைலாயக் கோயிலின்கண் சிற்ப துணுக் கங்களோ, சிலே உருவங்களோ இல்லாத தூணையும் சுவரையும் காண முடியாது. புராணக் கதைகளைச் சித்திரித்துக் காட்டு கின்ற சிற்பங்களும், தாமரைமலரும், அன்னமும், கிளியும், மயி இலும், பல்வகைக் கொடிகளும், தளிர்களும் அமைந்த போதிகை களும், தூண்களும், தூண்களின் அடிப்பீடங்களும், உத்தரங் களும் முடிவிலா அலங்காரக் குவியலாக இக்கைலாயக் கோயி வின்கண் விளங்குகின்றன.

வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில், பதி குருவது சருக்கத்தில் இராவணனது திக்கு விஜய வரலாற்றின் ஒரு பகுதி, சைவசித்தாந்தத்தின் மிகப் பெரியதோர் உண் மையை விளக்கும் திருஷ்டாந்தமாக அமைவது. இராவணன்