உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fää செக்தமிழ் இலக்கியத் திரட்டு-11

கைலையங்கிரியைப் பெயர்க்க முயன்றதும், சிவபெருமான் கால் கட்டை விரலால் கைலேயங்கிரியை அழுத்தி அரக்கன து செருக்க்ை அடக்கியதும், அரக்கனது செயலால் கைலேக் குன்று குலுங்கியதும், அப்பொழுது ஊடிப் பிரிந்த உமையம்மையார் அஞ்சி ஒடி வந்து இறைவனேத் தழுவினதும், இராவணன் தன் கரங்களில் ஒன்றைப் பெயர்த்து அதில் தன் உடல் காம்பை இழுத்துக் கட்டி வீணே ஒன்றைச் செய்து சிவபெருமானப் போற்றிப்பாடி அருள் பெற்றதுமாகிய கிகழ்ச்சிகள் சிற்ப ஓவி யக் கலைஞருக்குச் சிறந்த செய்திகளாயின. இக்கிகழ்ச்சிகளே க் கைலாயக் கோயிலே ஆக்கிய சிற்பியும் இராவனேச்சுவரனது ஆலயத்தில் வெகு அழகான பலகைச் சித்திரமாகச் செதுக்கி வைத்திருக்கின்ருன், இவை, கண் ணு, க் கண்டு களித்தற் கேற்ற அழகேயன்றிப் புத்தக வாயிலாய்த் தெளிவதற்கமைந்த அழகன்று.

19. தென்னிந்திய வணிகம்" (ஒன்பதாம் நூற்ருண்டு முதல் பதினன்காம் நூற்ருண்டு வரை) (S. K. கோவிந்தசாமி பிள்ளை, M.A.,)

தோற்றுவாய் :

இக்கட்டுரை, பழந்தமிழ் காட்டின் வாணிபத்தைப் பற்றி ஆராய எழுந்தது. தென்னிந்தியா என்ற சொற்ருெடர், வடுக கன்னட காடுகளேயும் தன்னகத்தேயுடையதாயினும், இவண் அதன் கண் அடங்கிய தமிழகம் ஒன்றனேயே குறிக்கும். இம் மூன்றும் ஒழிந்த மலையாளத்தைச் சொல்லாது விடுத்தது. பண் டைக்காலத்தில் மலேயாளம் தமிழகத்துக்குப் புறம்பல்லவென் பது கொண்டேயாகும்.

தமிழகத்தின் வணிக வரலாறு மிக்க பழமை உடைத்து. இந்தியப் பெருங்கடலில் கலஞ்செலுத்தி எகிப்து, பாபிலோன்,

妾 இக்கட்டுரையில் ஆசிரியரால் காட்டப்படுப துணுகிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் வகுப்பின் தகுதி பற்றி க்ேகப்பெற். அறு ைளன. - -