உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னிந்திய வணிகம் #37

சால்டியா முதலான நாகரிகமுயர்ந்த நாடுகளோடு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் பண்டம் மாற்றி வந்தனர். அதற்கறிகுறியாக எகிப்து காட்டிலும், சிற்ருசியாவிலும் (Asia minor) மெசபட்டோமியாவிலும் மண்ணினுள் புதைக் திருந்தெடுக்கப்பட்ட பல சான்றுகள் இப்பொழுதும் நமக்குக் கிடைக்கின்றன. கி.பி. முதலாம் நூற்ருண்டிலிருந்து நான்காம் நூற்ருண்டு வரை, தமிழர் உரோமப்பேரரசரோடு வர்த்தகம் செய்து வந்தனர். அதனல், தமிழர் அடைந்த செல்வம் கணக் கிட முடியாது. ரேக்கரும் உரோமரும் பண்டைத் தமிழ் நூல்களில் யவனர்' எனப்படுவர். அவர்களுடைய வணிகத் தைப் பற்றியெழுந்த நூல்கள் மூன்றுள. அவையாவன, ஒரு கிரேக்க வர்த்தகன் எழுதிய செங்கடற்செலவும், டாலிமீ என்பான் எழுதிய உலக நூலும், பிளினி என்பவன் எழு. தின இயற்கை நூலுமாம். இவ்வர்த்தகத்தைப் பற்றிய குறிப்புக்களைச் சங்க இலக்கியங்களில் நாம் காணலாம். யவன ருக்குப் பின்னர் இந்தியப் பெருங்கடல் வர்த்தகம் அராபி காட் டார்க்குச் சொந்தமாயிற்று. நாம் இவண் எடுத்துக்கொண்ட கால வரைக்கு முன்னர்ப் பல்லவர் என்ற ஓர் அரச குடியினர் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் அரசாட்சியில், தமிழர் கீழ்த்திசையில் பர்மா, மலேயா, சாவகம், சுமத்திரா, சீயம் முத லிய காடுகளோடு வணிகஞ் செய்து வந்தனர். கி.பி. ஒன்பதாம் நூற்ருண் டின் தொடக்கத்தில், தமிழரின் பெருங்கலங்களும், அராபியரின் காற்றைப்போல வேகமுடைய கப்பல்களும், சீனர்களின் சங்க் என்ற பெயரிய குன்றமன்ன நாவாய் களும் இந்தியப் பெருங்கடலிற் கூட்டங்கூட்டமாகக் கீழ்மேற் றிசைகளிற் பாய்களே விரித்து இங்குமங்கும் சென்றுகொண் டிருந்தன.

இக்கட்டுரையின் மூலங்கள் :

இனி, நாம் எடுத்துக்கொண்ட ஐந்நூறு ஆண்டுகளில் தமிழர் நடத்திய வர்த்தகத்தைப்பற்றி எழுதுமுன், அதையறி. தற்கு இன்றியமையாத மூலங்களை நாம் ஆராய வேண்டும். தமிழகத்தாரோடு வாணிகஞ்செய்த பல காட்டாருள், அராபி பரும் சீனரும் அவ்வணிகத்தைப்பற்றி நூல்கள் பல எழுதியுள்