உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱忍8 செக்தமிழ் இலக்கியத் திரட்டு-11

ளார். மற்றும், தென்னிந்தியாவில் யாத்திரை செய்த இருவர், தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் தொகுத்துச் சிறந்த நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றையொத்த நூல்கள் தமிழ கத்தில் இதுகாறும் கிடைக்காது போயினும், அக் குறையைத் தீர்க்கச் சிறந்த கல்வெட்டுக்களும், செப்டப்பட்டயங்களும் மைக் குக் கிடைத்திருக்கின்றன.

தென்னித்திய வர்த்தகரும் அராபியரும் : இந்தியப் பெருங்கடலில் வாணிபம் செய்தவர்களில் தலை சிறந்தவர் அராபியராவர். அவர்களுடைய விரிந்த வர்த்தகத் திற்கு ஏற்ற வண்ணம் அவர்கள் காடும் இரண்டு பெரும் பூப் பகுதிகளுக்கு இடையே இயற்கையாய் அமைந்திருக்கிறது. யவனர் தமிழகத்தோடு வர்த்தகம் செய்யத் தொடங்கு முன் னரே அராபியர் கம் காட்டொடு வர்த்தகம் செய்து வந்தனர். பருவக்காற்றுகளின் பயனே உலகில் முதல் முதல் அறிந்தவர் அராபியரே. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் போது அரா பியாவில் இருந்து புறப்பட்டுத் தென்னிந்தியாவை அடைந்து வர்த்தகம் செய்து பின் வடகிழக்குப் பருவக்காற்ருேடு அவர் கள் தம் காடு போய்ச் சேர்வர். முகமது 59 பிறக்கு முன்னரே அராபிய வர்த்தகம் மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சீனம் வரை விரிந்தது. கி. பி. 300ல் அராபியர்கள் கான் டன் என்ற சீனத் தலைநகரில் குடியேறியிருந்தனர் என்று சீன நூல்களி விருந்து நாம் அறிகிருேம்.

முகமது நபி தாம் நிறுவின மதத்தைப் பரப்பின பின்னர் அராபிய வர்த்தகம் முன்னிலும் பன்மடங்கு தழைத்தோங் கிற்று. சர். டி. ஆர்னல் டு என்பார், அராபியரின் வர்த் தக முன்னேற்றத்திற்குக் கீழ்க்காணும் காரணங்களேச் சொல்லு கின்றனர் :

(1) முகமதுவுக்குப் பின் தோன்றின கலீப் என்ற பட் டம் பெற்ற அரசர்களின் கீழ் அராபியரின் ஆட்சி கிழக்கே சிந்து கதிக் கரையிலிருந்து மேற்கே அட்லாண்டிக்குப் பெருங்கடலின் கரை வரை அகன்றிருந்தது. அரசியலின்பொருட்டு அதிகாரி கள் அவ்விரிந்த சிலப்பகுதியில் அடிக்கடி சுற்றுப்பிரயாணம் செய்ய கேர்ந்தது. அதனல், அராபிய வர்த்தகம் கடல் போலப்