உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னிந்திய வணிகம் #29

பரந்தது. வர்த்தகம் கொடியைப் பின் பற்றுகிறது, என்ற ஆக்கிலப் பழமொழியின் உண்மை இவண் காணலாம்.

(3) முகமதிய மதமும் இவ்விதச் சிறப்புக்கும் விரிவிற்கும் தாண்டுகோலாய் இருந்தது. அம்மதத்திற்கு அதன் புறம்பாய் உள்ளோரைக் கொண்டுவரவேண்டும் என்ற கட்டளையை முக மது பிறப்பித்தவுடன், முகமதிய அரசர்களும், சாதாரண மக்க ளும் தம் மதத்தைப் பரப்பினர். மதம் விரிந்ததல்ை வர்த்தக மும் விரிந்தது.

(3) மேற்சொன்ன இரண்டினும் சிறந்த காரணம் முகமதிய மக்களிடத்து வர்த்தகங்களுக்கு இருக்கும் சீரும் செல்வாக்குமே. தல சிறந்த மதாசாரியருக்கு ஒப்பானவர் வர்த்தகர், என்றும், அல்லாவின் உண்மைத் தொண்டர்’ என்றும் முகமது நபியே கூறியுள்ளார். ஒருவன் நல்ல நெறி யுடையன அல்லவா என்றறிதற்கு வர்த்தகமே உண்மையான சோதனே. கொண்டு கொடுக்கும் போதே ஒருவனின் அன்பும், சமயத்திட்பமும் வெளியாகும். என்றும், கான் இறக்க வேண் டியிருந்தால், அங்காடித் தெருவில் உவகையுடன் இறப்பேன்,' என்றும் காலிப் ஒமார் கூறுமிடத்து, அரசர்கட்கும் வர்த்தகத் தில் பெருமதிப்பு இருந்தது என்பது காம் சொல்லாமலே விளங்கும்.

இவையன்றி, அராபியர் நாடு பாலேயாய் இயற்கையில் அமைந்திருந்ததும் இவ்வர்த்தக மேன்மைக்குத் தக்க காரணமா கும்.

அராபியரின் முக்கிய துறைமுகப்பட்டினம், செங்கடலுள் நுழையும் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஏடன் அவ்வூரில் பல காட்டினர் குழுமி இருந்தனர் என்றும், தென்னிந்திய வர்த் தகரும் அவண் இருந்தனர் என்றும் அறியக்கிடக்கின்றது. அரா பியர் அங்கிருந்து புறப்பட்டுச் சிற்ருசியா, பாக்தாது, மோசல், டமாஸ்கஸ், பாஸ்ரா, சோமாலி முதலிய இடங்களில் கிடைக் கும் பொன்னிழையால் புனைந்த விலையுயர்ந்த ஆடைகள், டமா ஸ்கஸ் நகரத்தில் கெய்யும் புகழ் பெற்ற பட்டுத்துணி வேலைப் பாடமைந்த கண்ணுடிப் பொருள்கள், ரோசாப்பூவிலிருந்து எடுத்த பனிநீர் அததர் போன்ற நறுமணப் பொருள்கள், நறு. காற்றம் பொருந்திய மரப்பிசின்கள், பெருங்காயம், காண்டா