உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

மிருகத்தின் கொம்பு, இவை போன்ற மற்ற விலையுயர்ந்த பொருள்களையும் தம் கலங்களில் ஏற்றிக்கொண்டு, மிளகு காடு என்று அராபிய நூலாசிரியர்கள் எல்லோராலும் புகழ்ந்து கூறப்பட்ட சேரகாட்டுக் கடற்கரைப் பட்டினங்களான கொல் லம், கோழிக்கோடு முதலியவைகளே அடைந்து, பின் பாண்டி காட்டுத் துறைமுகமாகிய காயலுக்குச்சென்று, அவனிருந்து சோழ காட்டுத் துறைமுகங்களான தொண்டி, பாசி, காகப்பட் டினம், காரைக்கால், காவிரிப்பூம்பட்டினம் முதலியவற்றைச் சேர்வார்கள். பின், வடகிழக்குப் பருவக்காற்று வீசுகின்ற காலத்து மலேபடு பொருள்களான மிளகு, ஏலம், இலவங்கம், இஞ்சி, சந்தனம், அகில், சப்பான் மரம், தேக்கு மரம் முதலிய வைகளாலும், கடல்படு பொருள்களான பூனைக்கண்' என்ற மணிகளாலும், சோழநாட்டில் நெய்த நூலும் பட்டும் விரவிய பூந்துகில்களாலும் தம் கலங்களே கிரப்பிக்கொண்டு, அராபி யாவை அடைந்து, அவனிருந்து எகிப்து நாட்டில் சிறந்து விளங்கிய அலெக்சாண் டிரியாத் துறைமுகத்துக்கும், பாஸ்ரா, மோசல், இராக்கு, பாக்தாது, சிற்ருசியா முதலான இடங்களுக் கும் அப்பொருள்களே அனுப்புவர்.

தென்னிந்தியாவோடு அராபியர் நடத்திய குதிரை வர்த்தகம் :

அராபியர் நம் முன்னேருடன் நடத்திய வர்த்தகத்தில் அவர்கட்குப் பெரிய வருவாயைக் கொடுத்தது குதிரை வர்த்த கமே நம் காட்டரசர்களான சேர சோழ பாண்டியர்கள் எக் காலத்தும் போர்மேற்செல்லுதலில் விருட்பமுடையவராய் இருந்ததால், படைக்குக் குதிரைகள் வாங்க வேண்டியிருந்தது. இக்குதிரை வர்த்தகத்தைப்பற்றி மார்க்கோ போலோவும் அப்துல் வாசாபும் தத்தம் நூல்களில் விரித்து எழுதியுள்ளார் கள். அவர்கள் கூற்றுக்களே அப்படியே இவண் எடுத்து எழுதுவோம் :

மார்க்கோ போலோ சொல்லுவதாவது; இந்நாட்டினர் குதிரை வளர்ப்பதில்லை . ஆகையால், ஆண்டுதோறும் குதிரை களே இறக்குமதி செய்வதில் கணக்கில்லாத பொருளைச் செல விடுகின்றனர். சிஷ், ஹார்மூஸ், டோபிர், சோபிர், ஏடன் முத