உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 1. கடவுள் வாழ்த்து

1. இச்செய்யுள், இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட் பாவில் முதல் திருமுறையிலுள்ள மகாதேவ மாலையிற் சேர்ந்தது. இராமலிங்க சுவாமிகள் சிதம்பரத்துக்கு வடமேற்கிலுள்ள மரு தாரில் 1833-ஆம் ஆண்டில் தோன்றியவர். இப்பாடல் சுவாமி களது சமரசப்பான்மையையும் பத்தி நெறியையும் உணர்த்தும், இவர் வாக்குப் படிப்போருள் ளத்தைக் கரைக்கும் பத்திச்சுவையும் இனிமையும் மலிந்தது.

சமயம் - மதம். கங்கு எல்லே, சோடை - சோர்வு. தருக மரம். தடம் - குளம், செங்குமுதம் - செவ்வாம்பல்.

2. இச்செய்யுள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் முத லாயிரம் என்ற பிரிவுளடங்கியது. இதனை அருளிய குலசேகர ஆழ்வார் திருவஞ்சைக்களத்தில் சேரர் பரம்பரையில் திடவிரத ருக்கு மைக்தராய் அவதரித்து, அரசராய் விளங்கியவர். இவர் காலம் 9 ஆம் நூற்ருண்டென்பர். இவர் இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர்.

இருள் இரிய இருள் கெட. கெற்றி - உச்சி. துத்தி படப் புள்ளி. பணம் படம். அனங்தன் . ஆதிசேடன். பொன்னி , காவிரியாறு. அணே - மெத்தை. திரைக்கையால் அலேயாகிய கையால் (உருவகம்). வருட தடவ. பள்ளி கொள்ளும் கித் திரை செய்யும். கருமணி - கருமாணிக்கம் ; மரகதம். கோமளம் - அழகு, பெருமாளுக்கு ஆகுபெயர்.

3. இச்செய்யுள் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதி கத்தைச் சேர்ந்தது. இவர் சோழ நாட்டில் கோழிப் பதியில் சிவ பாதவிருதயர் பகவதியார் என்பார்க்குப் புத்திரராய்த் தோன்றிய வர். இவருடைய தெய்விக வரலாற்றின் விரிவைப் பெரிய புரா ணத்தில் காண்க. இவர் காலம் கி. பி. 640 (நரசிம்மவர்மன் காலம்). -

தாளம் முத்து. வலஞ்சுழி வாணன் - திருவலஞ்சுழியில் வாழ்பவன். வாணன் வாழ்கன், மரூஉ இத்தலம கும்பகோணம். தாலுக்காவிலுளளது.