உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

3. நல்குரவு - வறுமை. காளத்தி - காளத்தி யென்னும் பிரபு. கின்றை - கின்றையூர், ெேயங்கே கானெங்கே என்றது, அவன் வறுமை நீங்கத் தருவான் என்னும் துணிவு பற்றி. -

8. விண் - ஆகாயம், வெற்பு மலே. பெண்ணே - உமா தேவியை இடத்தில் இடப்பாகத்தில். இறைவன் . சிவபெரு மான். சடாமகுடம்-சடாமுடி இது, ஒருவர், கங்கை குடத்தில் அடங்கப் பாடுக என்ற போது பாடியது.

4. வெங்காயம்-ஈருள்ளி ; விரும்பத்தகும் உடம்பு. சுக்கா ணுல் . சுக்கெனும் சரக்கானல் வறண்டால். வெங்தயத்தால் - வெந்தயம் என்னும் சரக்கில்ை; வெந்த அயச்செந்து ரமென்னும் மருந்தினுல். சீரகம் - சீரகம் என்னும் சரக்கு; சிறந்த இடமாகிய மோகrம். பெருங்காயம் பெருங்காயம் என்னும் சரக்கு ; பெரிய உடய பு. ஏரகம் - ஏரகம் என்னும் ஊர். செட்டியார் - செட்டி குலத்தார் : முருகர்.

5. வைரவன் வாகனம் - காய், நான்முகன் வாகனம் - அன் னம் ; அதாவது சோறு. நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று - கருடப்பறவை போலப் பறந்து போயிற்று. மை வாகனன் . ஆட்டு வாகனத்தையுடைய அக்கினி : மை ஆடு. வயிற்றிற் பற்றுதல் - பசித்தியுண்டாதல். இது, கட்டுச்சோற்றை காய் கொண்டு போன போது பாடியது.

6. இது புலவர், இலங்கையரசன் பரராச கேசரியிடம் யாக்னக் கன்று பெற்று உவந்து பாடியது. களபம்-யானைக்கன்று ; கலவைச் சந்தனம். மாதங்கம்-யானே; பொன். வேழம்-யானே : கரும்பு. பகடு-யானே : எருமை. பாணன், யானே க்குரிய பல பெயர்களை மாற்றிச்சொல்லப் பாணி, அதற்கு வேறு பொருள் செய்ததாகப் புலவர் கூறியது நகைச்சுவை பயப்பது.

7. கால் திங்கள் . நான்கு மாதங்கள். மாற்றலரை - பகை வர்களே. பொன்ற சாக. புறங்கண்ட புறமுதுகிட்டு ஒடச் செய்த இது சோழன் ஒளவையாருக்குச் சேலைப்பரிசில் அளித்து அதனைப்பெரிதாக மதித்துப் பார்த்தபோது ஒளவையார் பாடியது.