உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரும் அதிகமானும் శ్రీః

இரு பாலார்க்கும் வேற்றுமையின்றி ஒரே தன்மையான அறிவைக் கொடுப்பதற்கு உடன்பட்டிருந்தது. அதல்ை, அக் காடு, ஆண் பெண் என்ற பால் வேறுபாட்டை அறவே நீக்கி, விழுமிய கல்வியறிவை வேண்டுவோர்க்கெல்லாம் விழைந்து கொடுத்தது : பிறப்பில் இழிபு கருதாது, கடைகிலத்தோராயி லும் கற்றறிந்தவர்களேத் தலே கிலத்து வைத்து மகிழ்வு பூத் தது : குடியிலும், தொழிலிலும், கோட்பாட்டிலும் பல் திறப் பட்ட கன்மக்களும் பகைமையின் றி ஒருங்கு குழுமித் தழுவி மகிழ இருந்தது ; இத்தன்மையெல்லாம் கம தண்டமிழ் காடு கொண்டிருந்தமையில்ை, குறவர் மறவர் குயவர் பாணர்களது குடியினுள்ளும், அரசர் மரபினுள்ளும், குற மகள், இளவெயினி, காவற்பெண்டு, வெண்ணிக் குயத்தி, ஆதிமந்தியார், பாரி மகளிர், பூதப்பாண்டியன் தேவியார், வெள்ளி வீதியார், நப்பசலையார், நக்கண்ணே யார், பொன் முடியார் முதலிய பல கல்விசைப் புலமை மெல்லியலார் தோன்றி, கம் தமிழ் காட்டினுக்கு என்றும் பொன்ருப் புகழை கல்கினர். அக்காலத்து இக்காட்டின் இவ்வியல்பால், கம் ஒளவையார் தடையின்றி இளமையிலேயே இயற்ற மிழ்க் கல்வியையும், தம் குடிக்குரிய இசை நாடகக் கலேகளையும் நன்கு பயின்று தேர்ச்சியுற்று, கல்லிசைப் புலமை மெல்லியர் தலேவியராயும், விறல்பட ஆடும் விறலியராயும் விளக்கமுற்றிருந்தார்.

இங்ங்ணமிருந்து இவர், தம் குல வாழ்க்கையாகிய பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டு, கம் தமிழகத்தில் கியாயமும் தியா கமும் வீரமுமிக்க திருவுடைய மன்னர் அவைக்களங்தோறுஞ் சென்று, தம் புலமைத் திறலேயும், ஆடல் பாடல்களின் விறலே யும் வெளிப்படுத்தி, அவர்கள் மனமுவந்தளிக்கும் பெருஞ் செல்வங்களைப் பெற்று, வாழ்ந்து வருவாராயினர்.

இவர் காலத்தில் சேரநாட்டின் ஒரு பகுதிக்கண் விளங் கிய தகடுர் என்னும் ஊரில் அதியமான் நெடுமானஞ்சி என்னும் ஒர் அரசன் அரசு செய்திருந்தனன். அவன் சேரர்க்கு உறவினன் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; வீரமிகுந்த வன் மழவர் என்னும் ஒரு வகை வீரர்கள் அடங்கிய