உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 செக்தமிழ் இலக்கியத் திரட்டு-11

படையை உடையவன், அவன் இவ்விதச் சிறப்புக்களோடு வண்

மையும் மிகுந்தவளுய் விளங்குவதையறிந்த ஒளவையார், அவ. னிடத்துப் பரிசில் பெறக் கருதி, அவனது தகடூரை அடைந்து, அவனைப் புகழ்ந்து பாடினர். அவ்வரசன் இவர்மீது பேரன்பு காட்டி உபசரித்தாளுயினும், இப்போதே பரிசில் அளித்தால்

இவர் அகன்றுவிடுவாராகையால், இவரைப் பிரிய நேரிடும்,

எனக் கருதிப் பரிசில் அளியாது, சில நாள் தாழ்த்திருந்தனன், ஒளவையாரும் சின் னுள் அவனது அரண்மனைக்கண் தங்கியிருக் தவர், அவன் பின்னரும் பரிசிலளியாது பேட்டிப்பது கண்டு சின

மிகுந்து, அவனே கேரிற்பார்ப்பதற்கும் விரும்பாது, அவன்

வாயிற்காவலாளனிடத்துச் சில கூறிவிட்டுச் செல்லக் கருதி ஞர். அதனுல், காவலாள னே கோக்கி, ' வாயில் காப்போய்,

வாயில் காப்போய், கொடை யுடையோரது செவியிடத்துப் பொருள் விளங்கும் சொற்களாகிய விதையை விதைத்துத்

தாம் நினேந்த பரிசிலாகிய தான்ியத்தை விளேவிக்கும் மன வலி

யுடையவர்களும், பெருமை பெறுதற்கே வருந்துகின்றவர்களு

மான பரிசில் வாழ்க்கையுடைய புலவர்க்கு அடைக்காத சிறந்த வாயிலைக் காப்போய், குரிசிலாகிய நெடுமானஞ்சி, தன் தரம் இத்தன்மையது என்று அறியானே? அதனே அறியாவிடினும்,

எம் தரத்தையேனும் அறியான்கொல்லோ அறிவும் புகழு முடையோர் அனைவரும் இறக்தொழிந்தாராக, இவ்வுலகம் வறிய இடத்தையுடையதாகிவிடவில்லையே ஆகலான், இப்

போதே புறப்படுகின்ருேம் ! எமது யாழ் முதலான கருவிகளை

மூட்டையாகக் கட்டித் தாக்கிச் செல்கின்ருேம்; இவனன்றி எமக்கு இல்லையோ இடம் : எத்திசைச் செல்லினும், அத்

திசையில் எம்மை அன்போடு உபசரித்துச் சோறிடுவார் பல ருளர் ; இதனை தும் அரசனுக்குக் கூறிவிடுவாயாக்,' என

முனிவுடன் மொழிந்து அறிவும் புகழும் உடைய கொடைஞ

ரிடத்துப் பரிசில் பெறுதற்கு விரைக்தெழுந்தார்.

இங்ங்ணம் இவர் சினந்து கூறிச் செல்லுதலே வாயில் காப் போனுல் அறிந்த அதியமான் அஞ்சி, இவர் முனிவுக்கு அஞ்சி, விரைந்து வந்து, இவரைக் கண்டு, இவர் கொண்ட கோபக் தணிய வேண்டி கின்று, தனது கொடைமன்றத்துக்கு அழைத் துச் சென்று, வீற்றிருக்கச் செய்து, வரிசை மிக்க பரிசில் அள