பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிம்பன் 27 நிமிட்டாம்பழம் நிம்பன் nimban, பெ. (n.) வேப்பமாலையுடைய | நிம்பொளம் nimbolam, பெ. (n.) முத்துவகை; பாண்டியன் (பழ.); the pandya king, as wear- ing a garland of morgosa flowers. [நிம்பம் நிம்பன்.] நிம்பாணி nimbani, பெ. (n.) இணைக்கும்படி இருபக்கமும் கூருள்ள ஆணி; coupling nail. [நெம்பு + ஆணி → நெம்பாணி நிம்பாணி.] நிம்பிச்சி nimbicci, பெ. (n.) சர்க்கரை வேம்பு; sweet margosa so called from its bark being sweet after some years. (சா.அக.). நிம்பியம் nimbiyam, பெ. (n.) வாழை; plantain tree-musa paradisiaca. (சா.அக.). நிம்பிரி nimbiri, பெ. (n.) பொறாமை; jeal- ousy, "சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு" (தொல்.பொருள்.245) நிம்பு-தல் nimbu-, 5 செ.குன்றாவி.(v.t) நெம்புதல்; to lift with a lever, (நெம்பு-, நிம்பு-,] நிம்புகம் nimbugam, பெ. (n.) எலுமிச்சை; lime-citrus medica. (சா.அக.). a kind of pearl. "ஒப்புமுத்துங் குறுமுத்தும் நிம்பொளமும்" (தெ.க.தொ. 2:143.). நிமம் nimam, பெ. (n.) பிடர்த்தலை (பிங்.); nape of the neck. [நிவ → நிம → நிமம், நிவ = உயர, மேலே.] நிமயம் nimayam, பெ. (n.) 1. கண்ணிமைப் பொழுது; twinkling of the eye, moment, instant; 2. அறுபது நொடி கொண்ட காலவளவு; minute of time =1/60 hour. [நிமையம் நிமயம்] நிமரம்பாம்பு nimaram - pambu, பெ.(n.) 'இரையெடுத்து அசைய முடியாமற் கிடக்கும் பாம்பு' (நாஞ்.); snake unable to move after taking its prey. [நிமிர் → நிமர் + அம் + பாம்பு.] நிமி'-தல் nimi-, 4 செ.கு.வி.(v.i.) வாய் நெளிதல்; to twitch, as the lips of a child in crying. "நிமியும் வாயொடு கண்கணீர் மல்க" (திவ். திருவாய். 6,5,2.). [நெளி → நிமி.] நிமி 2 nim, பெ. (n.) கதிரவன் குலத்து வேந்தரு ளொருவன்; a king of the solar race. "நிமித்திருமரபுளான்" (கம்பரா.திருவவதா.9.). நிமிச்சுற nimiccura, வி.எ. (adv.) நிறைய; full, to the brim. நிமிட்டாம்பழம் nimittam-palam, பெ.(n) கிள்ளு; pinch, humorously expressed as a fruit which a child may expect. [நிமிட்டு + ஆம் + பழம்.]