பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

111

மிகவும் உதவியாயிருந்தன. இவ்வாறு குறிக்கத்தக்க அமிசங்கள். சுரம், ஒருமை பன்மைகளைத் தவிர இருமை (த்வி வசனம், இது லிதுவேனியன் மொழியிலும் காப்பாற்றப்பட்டு வருகிறது), பல சொல்லாக்கங்களுக்குதவும் விகுதிகள், உயிர் மெய் எழுத்துக்களுக்கு ஏற்படும் மாறுபாடுகளை விளக்கும் விதிகள் ஆகும் இவற்றைப் போலவே இம்மொழிக்குரிய ஒலிகளும் உதவும்

சமஸ்கிருதத்தில் மொத்தம் 50 ஒலிகள் இருக்கின்றன இவற்றுள் 13 உயிர்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ,ா, ர, ல, (r, r, l),ஏ, ஐ, ஒ, ஒள திராவிட மொழிகளில் உள்ளதுபோல் எ, ஒ என்ற குறில் உயிர்கள் இல்லை ஆனால் சில சாமவேத மரபுகளில் குறில் எகர ஒகரங்கள் ஒலிப்பதாகப் பதஞ்சலி சொல்லுகிறார். மெய் யெழுத்துகளில் கவனிக்க வேண்டியவை: ஒவ்வொரு வகையிலும் வல்லினம், மெல்லினம், காற்றுக்கொண்டது, காற்றுக்கொள்ளாதது, மூக்கின் சம்பந்தம் பெற்றது என ஐந்து ஒலிகள் இருக்கின்றன இவற்றை ரோம லிபியில் பின் வருமாறு குறிக்கலாம்:

தொண்டையிலிருந்து எழுவன (Gutturals) K (க), Kh, g, gh, n (ங)

தாலு, அண்ணம் (Palatals) c (ச), (ch), J (ஜ) JhJ (ஜ) ((ஞ)
தலை (Cerebrals) t (ட), (th, d, dh, n (ண)
பல் (Dentals) t (த), (th, d, dh, n (ந)
இதழ் (Labials) p (ப), ph, b, bh, m (ம)
நான்கு உயிர்-மெய்கள் (Semi-vowels) y.(ய), r (ர), (ல), l (ல) v (வ)

மூன்று சகாரங்கள் (Sibilants), s`, s (sh),s (n) ஒரு மூச்சுமெய்: h (ஹ)

ஒரு முழுமூக்கு-ஒலி அனுச்வாரம்: (m)

உயிர் மெய்களுக்கு பின்னும் முன்னும் வரும் மூச்சுவிடும் ஒலி: