பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்தோ-ஐரோப்பிய
இலக்கணங்கள்

நாம் பேசும் மொழிக்கு அடிப்படையான சொற்றொடரில் சொற்கள் நிற்கும் நிலை, அவை ஒவ்வொன்றோடு இணையும் முறை இவைகளை இலக்கணமாகக் கொண்டு மொழிகளை வகுப்புக்களாகப் பிரிக்கலாம், சொல் தன்னைப் பொறுத்தமாத்திரத்தில் யாதொரு மாறுபாட்டையும் அடையாமல் தானிருக்கம் இடத்தினால் மட்டும் வாக்கியத்தில் பொருந்திப் பொருளை விளக்க உதவினால் அம்முறையைத் தழுவிய மொழியை 'தனி நிலை' மொழி என்று சொல்லலாம்; இம்முறை சீன மொழியில் காணப்படுகிறது

எம்மொழிகளில் பொருளுக்கு ஏற்பச் சொற்களில் ஒலிமாற்றங்களோ, கூடுதல், குறைதல், விகுதிச் சேர்க்கைகள் முதலியனவோ ஏற்படுகின்றவோ, அம்மொழிச் சொற்களில் விகுதிபோன்ற உறுப்புக்கள் இருப்பதால் அம்மொழிகளை உறுப்பு மொழிகள் என்பார்கள்

வாக்கியத்தில் உறுப்புக்களாகக் காணும் சொற்கள் மேலே சொன்ன மாறுதல்களுக்கு உட்படும்போது, அவ்வாறு ஏற்படும் மாறுதல்களைக் கொண்டு மொழிகளை மேலும் பல சாதிகளாக வகுக்கலாம் பல சொற்கள் ஒன்றுகூடி தத்தம் ஒலிகளுள் சிலவற்றை விட்டு? ஒரே இணைப்பாக ஒரு பொருளைச் சொல்லும்