பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புறநானூற்று
இலக்கியம்


சிங்கத் தொகை நூல்களில் எட்டுத் தொகையுள் ஒன்று புறப்பொருள் இலக்கணம் காட்டும் துறைவகைக்கேற்ப அமைந்த நானூறு பாட்டுக்கள் இதன்கண் தொகுக்கப்பட்டுள்ளமையால் இது புறநானூறு எனப்படுகிறது. இதிலுள்ள பாட்டுக்கள் யாவும் சங்ககாலத்துப் புலவர் பெருமக்களால் அவ்வப்போது பாடப் பெற்றவை அவர்கட்குப் பின்னே வந்த சான்றோர் இப்பாட்டுக் களைத் தேர்ந்து, திணையும் துறையும் வகுத்துத் தொகுத்துள்ளனர் இத்தொகுப்பின் கண் வேந்தர்கள் ஈடுபட்டிருப்பதால், இத்தொகை நூல்கள், பிற்போந்த வேந்தரும் சான்றோரும் கூடிச் செய்த இலக்கிய நன் முயற்சியின் விளைவாய்த் தோன்றியனவாகும்

ஆயினும், ஐங்குறுநூறு முதலிய தொகை நூல்களின் இறுதியில் தொகுத்த சான்றோர் பெயரும், தொகுப்பித்த வேந்தர் பெயரும் காணப்படுவது போல, இப்புறநானூற்றின் கண்காணப்படவில்லை; அதனால் இதனைத் தொகுத்தோரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை இந்நூலிலுள்ள பாட்டுக்களைப் பாடிய புலவர்கள் மட்டும் நூற்றமைம்பதுபேருக்குமேல் உள்ளனர்; இவருள் பதின்மருக்குமேல் பெண்பாற் புலவர்கள் இருக்கின்றனர் பாடப்பட்டோருள் ஐம்பது பேருக்கு மேல் முடிவேந்தரும், எண்பத்து மூன்று குறுநிலச் செல்-