பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

145

செய்யுட்களைத் தொகுத்த ஒரு நூலாகும் சங்ககாலத்துத் தொகை நூல்கள் பல தனிச் செய்யுட்களைத் தொகுத் தவை. புறத்திரட்டோ பல நூல்களிலுள்ள செய்யுட்களைப் பிரித்துத் தொகுத்துள்ளது. புறத்திரட்டு நூலானது திருக்குறளைப் பின்பற்றி முப்பால்களாகப் பிரிக்கப் பெற்றது. ஆனால், புறத்திரட்டுப் பிரதிகளிற் காமத்துப் பால் காணப்பெறவில்லை புறத் திரட்டுச் சுருக்கமெனப் பின்னரெழுந்த நூலில் உள்ள காமத்துப்பால் செய்யுட்களே இப்போது அச்சிடப் பெற்ற புறத்திறட்டிற் சேர்க் கப்பெற்றன. அவ்வாறு சேர்க்கப்பெற்ற காமத்துப்பாற் செய்யுட்கள் 65 இவை யாவும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாகக் கொண்ட புறப்பொருட் கைக்கிளையென அவை கூறப்பெறும்

புறத்திரட்டை நீதித்திரட்டென்றும் சில பிரதிகள் குறிப்பிட்டிருந்தன. நீதி என்பது புறப்பொருளில் அடங்குமேனும், புறப்பொருளெல்லாம் நீதியாகா. ஆகையால் புறத்திரட்டு என்னும் பெயரே பொருத்த மாயிற்று புறத்திணைத் துறைகள் யாவும் பன்னிரு படலத்தைப் பின்பற்றி அமைக்கப் பெற்றுள்ளன. அவை நிரை கோடல் முதல் வாழ்த்து முடிய உள்ள இருபத்து மூன்று அதிகாரங்களாக உள்ளன. அறத்துப்பாலில் 45 அதி காரங்களாக உள்ளன அறத்துப்பாலில் 45 அதிகாரங் களும் 473 செய்யுட்களும், பொருட்பாலில் 86 அதிகாரங்களும் 1032 செய்யுட்களும் உள்ளன புறத்திரட்டுச் சுருக்கத்திலிருந்து சேர்த்த காமத்துப் பாலில் உள்ள 65 செய்யுட்களுடன் 1570 செய்யுட்கள் புறத்திரட்டிலுள்ளன

இச்செய்யுட்களைத் திரட்டினோர் யாவரெனத் தெரியவில்லை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையிலே பல இடங்களிற் புறத்திரட்டுச் செய்யுட்களை எடுத்துக் காட்டுகிறார் புறத்திரட்டாசிரியர் தாம் எடுத்த நூலின் பெயரைக் குறிப்பிடுவதனால் இப்போது முழுவடிவில் இல்லாத பல நூல்களின் பெயர்கள்

செ பெ- 10