பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்வியலும்
திருக்குறளும்


திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் வாழ்வியல் அறநூல் பதினெண்கீழ்க் கணக்குத் தொகையில் முப்பால் என இது வழங்குகிறது அறம், பொருள், இன்பம், வீடு என்பவை மக்கள் நாடும் உறுதிப் பொருள்கள் எல்லாவற்றையும் விடும் வீட்டினை நீக்கி, மற்றவற்றைத் ‘திரிவர்க்கம்’ என்று வழங்கும் வழக்கம் உண்டு முப்பால் என்பது இந்தக் கருத்தினையே குறிக்கும் ஆனால், திருவள்ளுவர் முப்பாலால் நாற்பாலும் கூறுகிறார் என்பது திருவள்ளுவமாலை

அறம் என்பது ஒழுக்கம் என்பதையே அன்றி, அடிப்படையான நடத்தை முறை அனைத்தினையும் குறிப்பதும் உண்டு 'மோக்ஷ தருமம்' முதலிய வழக்கினை நோக்குக பெளத்தர் முதலியார், பொருளில் பயன்படுத்துவது வழக்கம் அந்த வகையிலேயே வள்ளுவரும் பயன்படுத்தி, அறத்துப்பால் என்ற முதற்பகுதியில் வீட்டினை, 'மற்றீண்டு வாரா நெறி' முதலியவாகக் கூறித் துறவற நெறி நின்று, அதனை அடையும் வழியையும் சுட்டுகிறார் எனலாம்

தனிப்பட்டவரின் அறம் பொதுவாக ஒழுக்கம் என்று பேசப்பெறும் அறநூல் இதனையே கூறும் சமுதாய நிலையிலிருந்து இதனை ஆராய்வது அருத்த

செ பெ - 14

செ பெ- 14