பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

211

முற்படுகிறது இந்தநூல் இந்த ஆராய்ச்சியிலேயும் இரு வகையான போக்குகளைக் காணலாம் “மக்கள் அடையும் முடிவு எல்லோர்க்கும் நல்லதாய், அறப்பாங்கில் சிறந்ததாய் இருந்தால் மட்டும் போதும் அதை அடைகின்ற வழி அறம் பிறழ்ந்தும், பலர்க்குத் தீயதாயும் இருந்தாலும அதனைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டுவதில்லை முடிவு நல்லதானால் அதனை அடையக்கூடிய எந்த வழியும் நல்லதே ஆம்” என்று கொள்வது ஒருவகைப் போக்கு முடிவினைப் போல வழியும் அப்பழுக்கில்லாததாய் இருத்தல் வேண்டும் என்று கொள்கின்ற போக்குத் திருவள்ளுவர் போக்கு இதனாலேயே ‘ஆபத் தர்மம்' முதலியவற்றைத் திருவள்ளுவர் ஒப்பவில்லை

இவ்வாறு முடிவும் வழியும் தூயனவாக அமைய வேண்டும் என்று வற்புறுத்தும்போது அத்தகைய நிலை ஒரு சிலர்க்கே கைகூடும் என்று கருதி, அதற்கேற்ப எழுதிப் போவோரும் உண்டு. ஆனால், திருவள்ளுவர் மனித வாழ்வில் நம்பிக்கை கொண்டவர் ஆதலால் எல்லோரும் பின்பற்றும் வகையில் விளக்கிச் செல்கின்றார் அடிப்படை உண்மைகளை வற்புறுத்தி, எல்லோரும் ஒப்புக் கொள்வனவற்றையே எடுத்துக் காட்டித் தங்கடமையை நிறைவேற்றுகின்றார் “நூலோர் தொகுத்த வற்றுளெல்லாம் தலை” என்றும் “பல்லாற்றன் நாடினும்” என்றும் கூறிவரும் இடங்கள் இப்போக்கினை வற்புறுத்தும்

காலத்திற்குக் காலமோ, இடத்திற்கு இடமோ, குலத்திற்குக் குலமோ மாறுபடும் வழக்க ஒழுக்கங்களைக் கூறாது எல்லோருக்கும் ஒப்ப முடிந்த பொது நெறியையே வள்ளுவர் கூறுகின்றார் என்பது திருக்குறளை ஆராய்வோரும் உரைகாண்பாரும் கண்டு கூறும் உண்மை ஆகும் தமிழ் நாட்டில் ஒருவரோடு ஒருவர் மன்றாடும் பழைய சமயவாதிகளும், புதிதாக வந்த சமயங்களைப் பின்பற்றுபவர்களும் இன்றைய சீர்-