பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

செந்தமிழ் பெட்டகம்

நிலையை அவன் அடைதல் வேண்டும் இயல்பாக அன்பென்பது அவன் ஆளுமையை உலகம் முழுவதுமாக மலர வைப்பதே இங்குள்ள வழி என்கிறார் வள்ளுவர்

அன்பே இல்லறத்தின் உயிர்நிலை உயிர் உண்டா ஒருவனுக்கு எனக் காண வள்ளுவர் அவன் நாடியைப்பாரார்; மூச்சினைப்பாரார், “அன்புண்டா?” என்றே கேட்பார் “அன்பின் வழியது உயிர்நிலை” தன்னலத்தால் பிறர் மாட்டு எழும் உள்ளப்போக்கே அவா தன்னலமே இன்றிப் பிறர் நலமே கருதி எழும் உள்ள நெகிழ்ச்சியே அன்பு அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இந்த நிலையை அடையும் பொது அன்பே சிவமாம் ஆனால், அதற்கு வேண்டிய வித்து ஒவ்வொரு வரிடமும் உண்டு மனைவி, மக்கள், நண்பர் நன்றி செய்தார், ஊரார் என்று இவ்வாறு இந்த அன்பு சிறுகச் சிறுகப் பெருகி, உலகம் முழுவதுமாகப் பரவி, அனைத்தினையும் தன்னகத்தே கொள்கிறது ஒப்புரவு என்பது இந்த நிலையைச் சுட்டும் “கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு” என்று வள்ளுவர் இந்த நிலையைப் புகழ்கின்றனர்

அன்பின் மலர்ச்சியால் வரும் பயனே அறன் உணர்ச்சி என்ற ஊற்றத்தாலேயே ஒழுக்கம் செயற்படும் என்ற உண்மை இங்கே நினைவுக்கு வருகிறது அறத்தினை விளக்கும் புதுப்போக்கு இது ‘அன்பே இல்லறத்தின் பண்பு, அறனே அதன் பயன்’ என்பது வள்ளுவர் காணும் சிறந்த உண்மை விருந்து, இன்சொல், நன்றி, நடுவு நிலைமை, அடக்கம், ஒழுக்கம் முதலியவை இந்த நோக்கில் ஆழ்ந்த பொருளைத் தருகின்றன. இவை வாழ்வின் குறிக்கோளாகவும் அமையக் காண்கிறோம்

பிறர்மனை நயவாமை, பொறுமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம் என்ற தலைப்புக்கள் இங்கு நாம் அஞ்சுவதற்குரிய தீமைகளை மறைமுகத்தால் சுட்டுகின்றன. பிறரோடு கலந்து வாழும் வாழ்க்கையை இத்-