பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

செந்தமிழ் பெட்டகம்

உண்டு இங்கே பகையினைத் துன்ப இயல் என ஆராயும் உரையாசிரியர்களும் உள்ளார்கள்

பொருள்களின் உண்மைத்தன்மையை அறியாத பேதைமையும், அதனினும் கொடிய சிற்றறிவும் உட்பகையாம் பெரியாரைப் பிழைத்து, அவர் உள்ளம் வெதும்ப நடத்தலும், காமத்தினால் கண்மூடிப் பெண் வழிச் செல்லுதலும், பரத்தைமை வாழ்வும், கள்ளும், சூதும் பெரும் பகையாகும்; பெருநோயாம்; பெருந்துன்பமாம் இவை இல்லாமையே நோய்தீரும் மருந்தாம் இவையே அன்றி, உடல் நோயின்றி மருந்துண்டு வாழ்வதும் அரசியலின் முடிவாம் வாழ்வன்றோ அரசியலின் குறிக்கோள்?

படையின் பெருமை பகை தோன்றும் உலகத்தின் பெருமையே ஆம் ஆதலின், இங்கே அது விளங்குகிறது நாடு விளங்கவேண்டும் அரசாங்கம் என்பதுபோல நாட்டங்கம் அல்லது நாட்டணி என்றும் வள்ளுவர் பேசுவர் “பிணியின்மை, செல்வம், விளைவு இன்ப்ம், ஏமம், அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து” அரண் என்றால் அக அரணும் (நாட்டமைதியும்) உண்டு புற அரணும் உண்டு வேந்தமைதியும் வேண்டும் பொருளும் வேண்டும் பொருளின்றி அறனும் இன்பமும்கூட நிலைக்குமோ? பொருளாதார அடிப்படையில் அரசியல் அமையவேண்டுமன்றோ? வரிவாங்குவதும் அரசியலின் கடமை தேனிட்டும் வண்டுபோல், மக்கள் வாழ மக்களிடம் வரியீட்டலும் வேண்டும் வகுத்தலும் வேண்டும் அங்கும் வரி கொடாரிடம் படையே வெளித்தோன்றி அரசியலைக் காக்கும்

இவ்வாறெல்லாம் நோக்கும்போது அரசனது கோலே எதிர் தோன்றுகிறது இதுவே இறைமையின் அடையாளம் தண்டநூல் எனப் பொருட்பால் சிலபோது பெயர் பெற்றாலும், அதன் குறிக்கோள் நேர்மையான பொது அறமே ஆம் எனவே, கோடாத செங்கோல் எனப் பேசுகின்றனர் பெரியோர் கொடியோரை ஒறுத்தல் அங்கே அறமாகிறது ஒறுக்காமையே