பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

223

பழியாம் ஆனால், கொடுங்கோன்மையும் வெருவந்த செய்தலும் நாட்டைக் கெடுத்துக் காடாக்கும் இங்கே தான் கண்ணோட்டம் நாகரிகம் எனப் பெயர்பெறும் நுட்பத்தை வள்ளுவர் விளக்குகிறார் குடிமக்களின் நலத்தைக் கெடுப்பாரைப் பொறுக்க முடியாதேனும், தன்னலக் கேட்டினைப் பொறுத்து வாழ்தலே அரசனின் அன்பு வாழ்க்கையாம்

அரசனின் தோற்றப் பொலிவு இவ்வாறு ஆரவாரமாக அமைந்தாலும், அவனிடம் சில உள்ளப்பாங்குகளும் உயிர்ப்பாங்குகளும் உண்டு அரசன் இன்ன இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்றெல்லாம் பிற பொருள் நூல்கள் கூறும் ஆனால், வள்ளுவரோ அரசன் என்று புறக்கோலத்தில் ஈடுபடுவதைவிட்டு, அவன் ஒரு மனிதன் என்ற கண்கொண்டு காணச் செய்து, அந்த மனிதப் பண்பாட்டிற்கு வேண்டிய கல்வியின் உயர்வை வற்புறுத்துகிறார் ஆதலின் இந்த நோக்கில் கூறுவன மக்களிற் சிறந்த அரசனுக்கு இன்றியமையாதன எனத் தோன்றுவதோடு, மக்களாய்ப் பிறந்தார் எல்லார்க்கும் பொதுவாக வேண்டும் சிறப்பாகவும் தோன்றுதல் காண்க இதனால் முடியரசை கூறாது குடியரசை வள்ளுவர் கூறுகின்றார் என்பது போலவும் தோன்றுகிறது அரசனைப் பண்பியாகக் கூறாமல் அரசு, வேந்து, இறை எனப் பண்பாகக் கூறுவதும் இறைமைக் குணத்தை வற்புறுத்துவதாக முடிகிறது முடியரசுக்கே அன்றிக் குடியரசுத் தலைவருக்கும் இவை பொருந்தி வரும்

இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவு டைமை, குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக் கோடல், சிற்றினஞ் சேராமை, தெரிந்து வினையாடல், வலியறிதல், இடம் அறிதல், காலம் அறிதல், என அரசன் இயல்புகளை உடன்பாட்டாலும் எதிர் மறையாலும் நோக்கிக் கண்டு, அறிவென்ற அடிப்படையில் அமைத்து, அரசியலை அறிஞரோடு சேர்ந்து வளரும் சிறப்பாக விளக்கித் தீமை