பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

செந்தமிழ் பெட்டகம்

நுணுக்கம் முதலியன பாடுகிறார் எனவே, இங்கும் பிறர் கூறாத வகையில் காமசாத்திரம் எழுதுகிறார் வள்ளுவர் பழந்தமிழைப் போற்றுகின்றார் எனக் கூறலாமேனும் இங்குப் பரத்தைமை இல்லாப் புது வழியே கூறுகிறார் எனல் வேண்டும்

திறக்குறளின் தூய்மையைப் புகழாத மேனாட்டார் இல்லை எனலாம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்ற தமிழ் நூல் ஒன்றுண்டென்றால் அது திருக்குறளே ஆம். திருக்குறள் இரண்டடிகளால் வெண்டளைவரும் ஏழு சீர்களால் அமைந்த குறள் வெண்பாவால் ஆனமை யின் இப்பெயர் பெற்றது அடிமுதலில் எதுகை பெறுதலும், சிலபொது முதலடியில் முதற் சீரும் கடைச் சீரும் எதுகை பெறுதலும் காண்கிறோம் குறளுக்கு அமைந்த செப்பலோசை உபதேசம்போல் ஒலிக்கிறது சுருக்கமாக சூத்திரம் போலவும் குறள் அமைகிறது சுருக்கமாகக் கூறினாலும் ஒவ்வொரு கருத்தினைப் பற்றியும் பத்துக் குறள் கொண்ட அதிகாரம் கூறுதலின் விளக்கமும் உள்ளது

அதிகார அமைப்பு ஏறக்குறைய எங்கும் ஒன்று போலவே காணப்பெற்றாலும், இயல் அமைப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடக் காண்கிறோம். ஆனால் நூலின் முதற்குறளும் கடைசிக்குறளும் மட்டும் மாறவில்லை. இதனால் வள்ளுவர் தனிக்குறள்களாகப் பாடியவற்றைப் பின்வந்தார் அதிகாரங்களாகவும் இயல்களாகவும் அமைத்தார்கள் என்று கொள்வாரும் உண்டு ஆனால், ஆயிர ஆண்டுகளாக இன்று வழங்கும் அதிகார அமைப்பு நின்று நிலவுகிறது எனல் வேண்டும் பத்துப்பத்துக்குறளாக அதிகாரங்கள் அமையும் அழகு இயற்கையாகத் தோன்றுவதால் அதிகாரப் பிரிவினைப் பிறரொருவர் புகுத்தியது என்பது நம்புதற் குரியதன்று

இதற்குப் பழைய உரை எழுதினோர் பத்துப் பேர் என்பர் அவற்றில் பல மறைந்து போயின பரிதியார்,