பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

239

சாசனங்கள் கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று கொள்ளப்படுவதால், இந்நூல் கிபி இரண்டாம் நூற்றாண்டினது எனலாம் இந்நூலில் குறிக்கப்படும் இலங்கை மன்னன் கயவாகு என்பவன் இலங்கை வரலாற்று நூலாகிய மகாவமிசத்தில் கயவாகு என்று பெயருள்ளவர் இருவர் உள்ளனர் அவர்களுள் முதற் கயவாகு இரண்டாம் நூற்றாண்டில் ஆண்டவன் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கயவாகு இவனே எனக் கொள்ளல் மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்கிறது

இதன் பதிகத்தில் கூறப்படும் செய்திகளை ஆராய்ந்தால் அவை சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றோடு இயைந்து வரவில்லை ஆதலின், பதிகம் பிற்காலத்துப் புலவர் ஒருவரால் சேர்க்கப்பெற்றதோ என்று ஐயுற இடம் உள்ளது அன்றிச் செங்குட்டுவனுடைய வரலாற்றிற்குச் சான்று எனக் கொள்ளப்படும் பதிற்றுப்பத்தின் பதிகம் உண்மையானதா என்பதும் ஆராயத்தக்கது இப்பதிகங்களில் உள்ள முரண்பாடுகள் வரலாற்று ஆராய்ச்சிக்குத் தடையாகின்றன. எனவே, பதிகங்களை ஒதுக்கி நூலை மட்டும் கொண்டு உண்மை காணுதல் நன்று

சிலப்பதிகார வரலாற்று ஆராய்ச்சியில் மயக்கத்தை விளைப்பது மற்றொன்றும் உள்ளது அது இளங்கோவடிகளோடு ஒரு காலத்தவரான மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் வேறு என உணராமல், சங்ககாலப் புலவர் என்பதை அவர்களின் பெயர்களுக்கு அடையாகவுள்ள ஊர்ப் பெயர்களை விளக்கி நிற்கின்றன ஒருவர் மதுரையார், மற்றொருவர் சீத்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர் ஆதலின், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சீத்தலைச் சாத்தனாரின் காலத்திற்குப் பிந்தியது எனக் கொள்ளல் வேண்டும்

இதில் காணப்படும் சொற்கள் சில, சங்க இலக்கியச் சொற்களின் வேறுப்ட்டனவாக இருத்தலால், இது மிகப்-